பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா.

83


"ராஜசேகரன் பிடிச்ச முயலுக்கு எப்பவும் முனு கால் தான்!” பெரியம்மா குரலில் ஒரே சமயத்தில் ஒரு நாடக வியப்பு, பிரமிப்பு, அடித் தளத்தில் ஒரு ஆத்திரம், எல் லாம் கலந்த அவியல். 'மூணு கால் எதுக்கு? என் முசல் ரெண்டு காலிலேயே நிக்கும். காது ரெண்டு நிக்குதே காலுக்குப் பதிலா-' இந்தப் பாஷைக்கு, இந்தத் தர்க்கத்துக்கு என்ன அர்த்தம்? இதெல்லாம்தான் பணக்காரனின் புத்தி சாதுர் யமான பேச்சு, இதுக்குச் சிரிச்சால் கூலி உண்டு. மணி கிரிக்கிறார். - 'முசல் சூப் ருசி, இந்தப் பருப்பு சாம்பாருங்களுக்குத் தெரியுமா?’’ - அந்த மிதப்பு நிலையிலிருந்து இன்னும் சரியாகத் தெளியவில்லை. இடக்கையால் விலாவில் மலர்த்தட்டை அனைத்துக் கொண்டு, மறு கையில் பவித்ர விரலுக்கும் கட்டை விரலுக்குமிடையே ஒரு பூ அம்பாளின் பாத கமலங்களை, உரிய நாமாவளியுடன் அடைய நடுங்குகை யில் வெளியிலிருந்து உள் வெளிச்சத்துள் அந்தச் சிறு குழாம் நுழைவதற்கும், அவர் தற்செயலாக முகம் திரும் பு வதற்கும் சரியாக யிருந்தது. தட்டு கீழே விழாமலிருந்தது அவர் புண்யம். அல்ல. கமலாம்பிகையின் புண்யமா? காலடியில் பூமி நகர்ந்தது. கமலாம்பிகை அரை அங்குலம் சட்டென்று உயர்ந்து நின்றாள். அவளும் அவரைப் பார்த்து விட்டாள். அவள் தாய், மகளின் பின் ஒளிந்து கொள்ள முயன்றாள். லோடு மாற்றமோ என்னவோ, ஒரு கணம், மின்சார விளக்குகளில் வெளிச்சம் முறுக்கேறிற்று.