பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

கல் சிரிக்கிறது


எங்களைக் குருடாக்கிடுத்து. நாங்கள் மனுஷாளாவே யில்லை எப்படி அப்படி மாறினோம்னு எனக்கு இன்னும் தெரியல்லே. உன் அழகுக்கு மூணு மாசத்திலே நீ பம்பாய்லே ஸ்டார் ஆயிடுவேன்னு அம்மா என்னைக் குழிலே தள்ளிட்டா." மரகதம் எப்படித் தடிச்சுப்போயிட்டா ஒடிய ஒடியப் பெண்ணை விட அவள்தான் அழகுன்னு சொன்னால் யார் இப்போ நம்புவா? ஆண் பிள்ளையாவே ஆயிட்டா, பெண்ணின் விவகாரங்களை நிர்வாகம் பண்ணுகிறாளோன்னோ? மரகதம் என்னிக்குமே குதிரை தான். கடிவாளத்தைக் கடிச்சுத் துப்பி எறிஞ்சுட்டா. இனிமேல் அவளை எந்த வேலியும் மடக்க முடியாது. 'பத்து வருஷங்களாச்சு! என்ன பவிஷ-க்கு வந்திருக் கேன்,நீங்களேபார்த்துட்டேன். ஆமாம், இனிமேல்மறைக்க என்ன இருக்கு? ஒத்தரை யொருத்தர் நொந்துண்டு, அழுது, சண்டை போட்டுண்டு, உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்டே, கட்டம் எல்லாம் தாண்டிப் போயாச்சே, இனி எங்களுக்கு மீட்சியே கிடையாது. ஆசைப்பட்ட பண்டம் ஊசல். இப்போ தெரிஞ்சு என்ன பயன்? அப்பா! பேசுங்களேன்! ஏதேனும் என்னைத் திட்டவாவது திட்டுங்களேன்! உங்கள் குரலையாவது கேக்கறேன். அப்பா! நீங்க நிஜம்மா இங்கே இருக்கேளா? இல்லே, நான் தினமும் நெனைச்சு நெனைச்சு, நெனைச்ச நெனைப்பே தோற்றமா? அப்பா! காணாமல் போயிடுவேளா? அப்பா, உங்களை மன்னிப்புக் கேட்டு அவமானப்படுத்த மாட்டேன். மீட்சி யில்லேன்னு சொல்லிட்டேனே! அப்பா! உங்களைப் பார்த்தால் பயமாயிருக்கு என்னை எனக்கு நினைவு படுத்த வந்த உங்கள் ஆவி மாதிரி இருக்கேள்.' 'மது! நேரமாவுது!’ எந்தக் கரையிலிருந்தோ குரல் வந்தது. இல்லே. கரையில்லே. நடுக் கடலிலிருந்து. 'வந்துட்டேன்!'