பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

婚创阿. F。历”fT。 37 நடுக் கடலை நோக்கிச் சென்றாள். கடலுள் போயே விட்டாள். 6 1னைக் சந்த் செளகார் என்றால், தோசை மாவு போல் பொங்கி வழியும் ஊளைச் சதை, உப்பிய கன்னங்க வளிடையே தொங்கும் கொத்து மீசை, மூன்று மோவாய், பிதுங்கிய தாங்குமூஞ்சி விழிகள், தலையில் சுற்றிய பெரிய மூண்டாசுமாய், தரையில் விரித்த மெத்தை, திண்டுகளிடையே சாய்ந்து கொண்டிருப்பதாய் எதிர் பார்த்துக் கொண்டு போனால், அது உள்ளத்துக்கு எவ்வளவு முரண் என்று எதிரே பார்த்தால்தானே தெரி கிறது. வெள்ளை மரப்பாச்சி போல், மெலிந்து சிறிய உருவம் ஒன்று சோபாவிலிருந்து எழுந்து, அவரை வரவேற்றது. வெகு குட்டையாக வெட்டிய க்ராப், 'குட் மார்னிங். என்னால் என்ன காரியம் ஆகணும்?' பாலிஷ் ஏறிய குரல் காலடியில் பெரிய கன்றுக் குட்டி போல் ஒரு நாய். அந்தக் காலத்து ராஜாக்கள் புலியை வளர்ப்பார்களாம். நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு, வந்த ஆளை அலகூதியமாக ஒருமுறை பார்த்து விட்டுத் தன் சிந்தனைக் குத் திரும்பி விட்டது. குரைக்கவில்லை. ஆகையால், கடிக்கும். கடித்தால் துண்டுதான். ஒரு கணம் பேச்சு வராமல் திகைத்து நின்றார். சம