பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா.

89

. கடன் கொடுத்து ஏமாத்திட்டாங்க. இப்போ நாலஞ்சு வருஷமா இப்படிப் புளைப்பு.’’ 'நல்ல காலம், கெட்ட காலம் மாறி மாறி-' *ஆமா, காலம் கெட்டுக் கிடக்கு." 'ஆப்கோ நாம்?’’ 'தர்மராஜன்.' 'நல்ல பேரு. உங்களை மிஸ்டர் தரம்னு கூப்பிட லாமா? தர்மேந்திரா-பிலிம் ஸ்டார், தெரியுமல்ல?’ சிரி த் தான், மழமழவென்று கூடிவரம் செய்து, மாசு மறுவற்ற முகம். ரத்தம் செத்துப்போய், ஒட்டிய கன்னங்களுக்குக் கொஞ்சம் முகமூடி மாதிரி தானிருந்தது. ஆயினும் சிரிக் கும் போதெல்லாம் ஒரு கவர்ச்சி வெளிப்பட்டது. பல் மெய்தான். வரிசைதான். சேட் இப்போ எனக்குக் கஷ்டம். நான் சமையல் செய்திருந்த இடத்தில் அவங்க குவாயிட்டுக்குப் போயிட் டாங்க. மூணு மாதமா தேடறேன். குதிரல்லே. கொஞ்ச நஞ்சம் சேர்த்து வெச்சிருந்ததெல்லாம் கரைஞ்சுக்கிட்டே வருது. நீங்கள் ஒத்தாசை செய்யணும். நான் பிச்சைக்கு வல்லே. வேலை செய்து கூலி வாங்கத்தான் கேக்கறேன்.” 'நான் பிச்சை போடறவன் இல்லே ' மறுபடியும் அந்தப் புன்னகை, ஆனால் உங்களை வெச்சுக்க மனம் இடம் கொடுக்கல்லே, விடவும் மனம் இல்லே. லேபர் கிடைக்கறது அவ்வளவு கஷ்டமா யிருக்குது. ரெண்டு மூணு பேர் வந்தாங்க. சிபாரிசோடு வந்தாங்க. மீட் சமையல் தெரியும்னாங்க. ஆனால் பார்க்கவே அசுத்தம். பிடிக்கல்லே. அனுப்பிச்சுட்டேன். ஆள் கிடைக்கறது கஷ்டம். ஆனால் சமையல்காரன் அவசியம் வேனும். எனக்குச் சங்கடம் பண்ணிட்டீங்க இப்போ...' 'நான் எல்லா வேலையும் செய்வேன் சே!.” "எல்லா வேலையும் நீங்கள் செய்ய வேண்டாம். மத்த