பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

கல் சிரிக்கிறது


வேலைக்கு வேலைக்காரி இருக்குது. சமையல் மட்டும் தான். நம்ம ரெண்டு பேருக்கு மாத்திரம். ஜாகை மாடி யிலே.' மேலே சுட்டிக் காட்டினான். 'அவ்வளவுதானா? ஏழெட்டுப்பேராவது இருக்கும்னு நெனைச்சேன். இது ஒரு வேலையா?” "ஆமாம், ஆமாம். காலையிலே தோசா, காப்பி. மத்தியானம் ஒரு மணிக்கு கானா. எனக்கு ரெண்டு சப்பாத்தி, அப்புறம் சோறு, LDs了@@a) & stiliss, பிஸ்கட். அதெல்லாம் டின்லே இருக்குது. ராத்திரி சப்பாத்தி, பூரி, பாஜி, ஆலு ஸ்லேட்...” சேட், ஊதித் தள்ளிடுவேன். நான் ஸ்மோஸா கூடச் செய்வேன். ஆனால் நீங்கள் செய்யற மாதிரி, பூ மாதிரி மடிக்க வராது. மசாலாவை உள்ளே வெச்சே மேலே ஸிம்ப்ளா மூடிப் பொரிச்சு எடுத்துடுவேன். உருவம் தான் வேறே. ருசி ஒண்ணுதான்.” சலுகையாகச் சிரித்தான். இல்லே இல்லே, டேஸ்ட் வேறேதான். சமோஸா வேறே, நீங்கள் செய்யறது வேறே. பரவா நை. நமக்கு நாற்பது வருஷமா இங்கேயே இருந்து மதராஸ் டிஷ்ஷஸ் நல்லா பளகிப் போச்சு. மட்டன் நினைப்பு வந்தால் புஹாரிலேருந்து வரவழைச்சா போச்சு. மேலே வர மாட்டேன். இங்கேயே அப்போ சாப்பிடுவேன். ஆனால், அய்யர் உங்களைப் பார்த்தால் தான் மனசு இன்னும் தகறார் பண்ணுது.” சேட் என் தோற்றம் என் துரதிர்ஷ்டம்.” "ஆமாம், நீங்கள் ஐரோப்பியன் மாதிரி இருக்கீங்க.' சேட், அதுக்குக்கூட நான் என்ன செய்வேன் சேட்-'

  • * ஆமாம்,'

'ப்ரதி சனிவார் சாயந்திரம் எனக்கு லீவு கொடுக்