பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா.

91


கணும். நான் வாரத்துக்கு ஒரு நாள் விடுமுறைன் னு ருல் பேசல்லே. ஆனால், சாயங்காலம் மட்டும்-' 'அப்போ அன்னி ராத்திரி ரொட்டி, பழம்.” தேங்க்ஸ், சேட்." ராத்திரி வந்துடுவீங்களா?' 'பத்து, பதினொண்ணு ஆகுமே!’ 'பரவாயில்லை. வாசல் கதவுக்கு டுப்ளிகேட் சாவி கொடுக்கறேன். ராத்திரி எத்ணி நேரமானாலும் வாபஸ் ஆயிடுங்க. முக்கியமா ராத்திரி தங்கனும். நமக்கு ஒரு துணை வேணும். நான் சீக்காளி-' 'டிக் ஹை மஹ்ராஜ். நாளைக் காலை வரேன். நாளைக்கு நல்ல நேரம்.' நோ மஹ்ராஜ், மிஸ்டர் தரம் என் பேர் மனக்சந்த் நீங்கள் ஒரு ஹம்பக். ஆனால் நல்ல மனுசன்னு நினைக் கிறேன் .' பிற்பகல், மணி, எதிரே விபூதி மடலுடன் வெளி மண்டபத்தில் உட்கார்ந்திருந்தார். 'நீ இன்னிக் காலையில் வல்லே. அம்பாள் வாயில் மண்ணைப் போட்டுடுவையோன்னு வந்து பார்த்தேன். நினைச்சபடியே ஆச்சு.” 'நான் உங்கிட்ட சாவியையே வாங்கிக்கல்லையே!” 'இங்கே சாவியை வாங்கிண்டு போறதும், கொண்டு வரதும் கிடையாது. இதோ.பார். இந்தத் தூணில் கல்லுக் கிடையில் ஒரு சந்து இருக்கே, இங்கே சாவியைச் செருகிட்டுப் போயிட வேண்டியதுதான். காலையும் மாலையும் விளக்குப் போடப் பண்டாரம் வருவான். அவனுக்கும் சாவி இருக்கிற இடம் தெரியும். இங்கே பூட்டிப் பாதுகாக்கற மாதிரி ஒரு பண்டமும் கிடையாது.