பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

கல் சிரிக்கிறது

. அஞ்ஞாதவாஸ் காரணம் சொல்ல உங்களுக்கு இஷ்ட மில்லே. நான் கேட்க மாட்டேன். உங்களிஸ்டம். ஆனால் நான் உங்களை நம்பல்லே. நம்ப மாட்டேன்.” பிடரியில் முள் பிடுங்கிற்று. 'இந்த பாஜி ரொம்ப நல்லாயிருக்கு. விரலை அதில் தோய்த்து வாய்க்குள் விட்டுக் கொண்டான். உங்களை எனக்குப் பிடிக்கிறது. பலதரம் நீங்க நல்லா சாப்பாடு செய்யlங்கன்னு இல்லே. உங்களுக்காகவே உங்களைப் பிடிக்கிறது. ஆனால் நீங்கள் நாளையிலிருந்து சமைக்க வேணாம். நீங்கள் வீட்டுக்குப் போயிடலாம். நான் மானேஜ் பண்ணிக்கறேன்!' 'இப்படிச் சொன்னால் என்ன அர்த்தம், சேட்? நோ நோ. மிஸ்டர் மனக்சந்த்.” ஊசி முனை போன்ற கண்கள் அவர் முகத்தைத் துருவின. - 'ஆல்ரைட், இதற்கு முன்னால் எங்கே யிருந்தீங்க?' 'நாலு மாசத்துக்கு முன்னால் அவங்க குவாயிட் போயிட்டாங்கன்னு சொன்னனே!' 'அவங்களுக்கு முன்னால்?’’ 'அவங்ககிட்டேதான் அஞ்சாறு வருஷமாயிருந்தேன். ஸ்வஜாதி. அந்த வீட்டு லேடி தான் என் கஷ்டம் பார்த்துச் சமையல் வேலைகளைச் சொல்லிக் கொடுத்தாங்க-’’ 'ஹம் - பல்லுக் குச்சியால் பல்லைக் குத்திக் கொண்டு சேட் அருகே தொட்டியில் ஒரு பூவைச் சிந்தித் துக் கொண்டிருந்தான். பெரிய பூ, இதழ்கள் திறக்க யத் தனம் பண்ணிக் கொண்டிருந்தது. இரவுப் பூ "மிஸ்டர் மனக்சந்த், உங்களுக்கு என்னைப் பத்தி ஏதேனும் சர்ட்டிபிகேட் வேனுமா? இது ஒரு குருட் டாம் போக்கு அடி. அவன் வேனும் என்று கேட்டு விட்டால்?