நெடுஞ்செழியன் 11 பொருள்களும் விளக்கப்பட் டிருக்கின்றன. பிளினி கி.பி.79-ல் இறந்தார். அவர் ஒரு அறிவியல் அறிஞ ராகவோ, தத்துவ அறிஞராகவோ இருக்கவில்லை. இயற்கை நுட்பங்களை யெல்லாம், அறிந்தவர் கூட அல்ல. அவர் தம்முடைய ஓய்வு நேரங்களில், 464 ஆசிரியர்கள் எழுதிய சுமார் 2000 நூல்களிலிருந்து ஏறக்குறைய 20,000 கருத்துக்களைத் திரட்டி களஞ்சி யம் உண்டாக்கினார். கி.பி. ஐந்தாவது நூற்றாண்டில் வாழ் க் த காபெல்லா (Canell) என்ற ஆப்பிரிக்காக் கண்டத்துப் போறிவாளி செய்யுளும், உரை நடையுங் கலந்த களஞ் சியம் ஒன்றை இயற்றினார். இடைக் காலங்களில் மக் கள் அதனைப் பெரிய தொரு கல்விக் களஞ்சியமாகக் கருதினர். கல்விச் சாலைகளில் அதனையே பாட நூலா கக் கொண்டிருந்தார்கள். அதில் காணப்படும் செய் யுட்களை மனப்பாடம் செய்வதுகற்றறிந்தோரின் அந்தக் கால வழக்கமாக இருந்து வந்தது. i செவில்லி (Jevillc) நகரத்துப் பாதிரியராக இருந்த இஸ்டோர் (Isidorr) என்பார் கி.பி.600 630-க்கு இடையில் ஒரு களஞ்சியத்தை உருவாக்கினார். அந்தக் காலங்களில் கல்வியறிவுடையோர் பெரும்பா லும் பாதிரிமார்களாகவே இருந்ததால் இந்த செயல் அவர்களால் முடிவதாயிற்று. கி.பி.847-ம் ஆண்டில் மெய்ணி (Mainv) நாரத் துப் பாதிரியார் ஹெபானஸ் மௌரஸ் (Habanus Maur-) ஒரு களஞ்சியம் இயற்றினார். அது 22 பாகங் களைக்கொண் டிருந்தது.
பக்கம்:களஞ்சியம் 1953.pdf/11
Appearance