உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களஞ்சியம் 1953.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 களஞ்சியம் P கி.பி.பத்தாவது நூற்றாண்டில் பிராலி (Farali) என்ற அறிஞர் களஞ்சியம் ஒன்றை யெழுதி இலக்கிய உலகில் நடமாட விட்டார். அதற்குப் பிறகு பெரும்புகழ் வாய்ந்த களஞ்சிய மாக விளங்கியது பியூவெய்ஸைச் சேர்ந்த வின்சென்ட் (Vincent of Banvai) என்பார் எழுதியதாகும். அவர் கி.பி.1190-1264-க்கும் இடையில் வாழ்ந்தவராவார். அவர் 18வது நூற்றாண்டின் அறிவுலகைப்படம் பிடித் துக் காட்டுகிறார் அக்களஞ்சியத்தில். பிளாரன்ஸ் (Florener) வாசியான புரூனெட்டோ (Brunei ) நாடு கடத்தப்பட்டு பிரான்ஸ் நாட்டிலே காலக் கழித்த பொழுது பிரெஞ்சு மொழியிலே ஒரு களஞ்சியம் உண்டாக்கினார். கி.பி. 1260-ம் ஆண்டி லிருந்து கி.பி. 1267-ம் ஆண்டு வரையிலும் அவர் பிரான்ஸ் நாட்டிலே தங்கியிருந்தார். பிரான்ஸ் நாட்டு அரசவையின் வரலாற்றாசிரிய ராக விளங்கிய ஜீன்-டி-மாக்னன், (CleanDeMagnan) வீர வரலாறுகளைப் பிரெஞ்சு மொழியில் செய்யுளுரு வில் களஞ்சியமாகத் திரட்டித்தர முற்பட்டார். அதனை 20,000 அடிகள் கொண்ட பத்துப் பாகங்களாக ஆக் கித் தருவது என்று தீர்மானிக்கப்பட் டிருந்தது. அவர் அதை முடிவு பெறச் செய்வதற்கு முன்பே இராக் கொள்கைகாரர்களால் கொல்லப்பட்டு இறந்ததால், அவர் எழுதிய வரையிலும் உள்ளதை 11,000 அடிகள் கொண்ட பத்து பாகங்களாகப் பிறகு வெளியிட்டனர். E இவ்வாறாக ஒன்றன் பின் ஒன்றாக வளர்ந்து வந்த களஞ்சியங்கள், ஒவ்வொரு துறையையும் பற்றிய கருத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களஞ்சியம்_1953.pdf/12&oldid=1732247" இலிருந்து மீள்விக்கப்பட்டது