நெடுஞ்செழியன் 13 துக்களை நாளுக்கு நாள் சிறப்பாகக் கொடுக்கத் தலைப் பட்டன. ஒவ்வொருவரும் தங்களாலானதைச் செய்து, களஞ்சியத்தை எழில் பெற்றதாக்க முயன்று, மறைந் தனர். அவர்கள், தங்கள் அறிவு தாங்கும் அளவுக்குச் சுமந்து வந்த கருத்து மணிகளைக் களஞ்சியத்தில் கொட்டி நிரப்பினர். மக்கள் தங்கள் அறிவுப் பசியைத் தணிக்க எண்ணும்போது களஞ்சியத்திலிருந்து கருத்து மணிகளை எடுத்துக் கொண்டார்கள். கி.பி. 1474-ல் இத்தாலி மொழியில் பி. லாட்டினி (B. Latini) என்பவர் ஒரு களஞ்சியம் உண்டாக்கினார். கி.பி.1559-ல் பால் சீலிஞ்சும் (Paul Solioh) 1615-ல் அண்டோனியா ஜாராவும் (Antoria Zara) 1630-ல் அலர்டெட்டும் (Artoi} 1674-ல் மொரேரியும் (Mreri) தனித்தனியே லத்தீன் மொழியில் களஞ்சி யங்கள் தோற்றுவித்தார்கள். ஆங்கிலத்தில் களஞ்சியத்தை அகர வரிசையில் முதல் முதலாக எழுதியவர் லண்டன் பாதிரியான ஜான் ஹாரிஸ் (John farris}. அவர் கி.பி.1667- 1719-க்கு இடையில் வாழ்ந்தவர். களஞ்சியத்தைப் பெரிதாகவும், விரிவானதாகவும் முதல் முதலாகக் கொண்டுவர பெருமுயற்சி எடுத்துக் கொண்டவர், லீப்சிக் (Leipziz) நகரில் வாழ்ந்த தோஹன் ஹெயின்ரிச் ஜெட்லர் (Tolenn Einrich endler. 1766-1760) என்ற புத்தகக் கடை வியாபாரி யாவார். இலக்கிய உலகிலே அதுவரையில் எழுந்திராத அளவுக்குப் பெரிதாகவும், போற்றத் தகுந்ததாகவும்,
பக்கம்:களஞ்சியம் 1953.pdf/13
Appearance