14 இலக்கியச் களஞ்சியம் சுவைப் பொதிந்ததாகவும்,புரட்சியை உண்டுபண்ணக் கூடியதாகவும் அமைந்த களஞ்சியம் "பிரெஞ்சுக் களஞ்சியம்" ஆகும். அது பதினெட்டாம் நூற்றாண்டு கொடுத்த பரிசு. பிரான்ஸ் நாட்டில் குடியேறியிருந்த ஜான் மில்ஸ் (John Mills) என்ற ஆங்கிலேயர் சேம்பர்ஸ் களஞ்சி மத்தை மொழி பெயர்த்துத் தருவதன் மூலம் 1743- 45-ம் ஆண்டுகளுக்கிடையில் பிரெஞ்சுக் களஞ்சியத்தை உருவாக்க முயன்றார். லெப்ரிடன் (Lebreton) என்ற அச்சியற்றுபவர்ஒருவரிடம் களஞ்சியத்தை அச்சடிக்கக் கொடுத்தார். பிரான்ஸில் அன்னியர் ஒருவர் நூல் அச்சியற்ற வேண்டுமானால் அரசாங்கத்தின் அனுமதி பெறுவது கடினமாக இருந்ததால் லெப்ரிடன் தன் பெயரிலேயே அச்சிட்டார். இது மில்ஸுக்குப் பிடிக்க வில்லை. மில்ஸ் லெப்ரிடனை வசை மொழிகளால் தாக்கி விட்டுத் தான் மேற்கொண்ட செயலைக் கைநழுவ விட்டார். பின்பு அவர் இங்கிலாந்துக்குச் சென்றுவிட் டார். பிரான்ஸ் கல்லூரியில் தத்துவப் பேரறிஞராக விளங்கிய ஜீன் பால் டி குவா டி மால்விஸ் (Goan Pa de gra de malves) என்பவர் களஞ்சியத்தைப் பூர்த்தி செய்யும் தொழிலை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். அதுவரையில் திரட்டப் பட்டக் கருத்துக் கோவைகளிலுள்ள குற்றங்களைக் களையவும், புதிய கண்டுபிடிப்புகளைச் சேர்க்கவும் ஆன முயற்சியில் அவர் ஈடுபட்டார். லாயி (Louis) கண்டிலாக் (Condilac) டி அலெம்பர்ட் (d' Alembert) டைடெராட் (Diderot) போன்ற கற்றறிவாளர்களின் துணைகொண்டு களஞ்சி
பக்கம்:களஞ்சியம் 1953.pdf/14
Appearance