உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களஞ்சியம் 1953.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுஞ்செழியன் 15 யத்தைச் செப்பனிட அவர் முயன்றார். களஞ்சியத்தை வெளியிட எண்ணிய பதிப்பாளர்கள் டி குவாளிற்குப் பொது மக்கள் செல்வாக்கு இல்லாததால் விற்பனை வெற்றி தராது என்று கருதி அவரை அலட்சியப்படுத் தினர். அவர் போடும் திட்டம் ஒவ்வொன்றும் மிக்க செலவைக் கொடுக்கிறது என்று குற்றஞ் சாட்டினர். அவரால் இவற்றை பெல்லாம் பொறுத்துக் கொண் டிருக்க முடியவில்லை. ஆகவே தொகுப்பாசிரியர் வேலை யினின்று அவர் விலகினார். பதிப்பாளர்கள் களஞ்சியத்தைப் பொறுத்த அள வில் அதிகப் பொருள் முன்பணமாகச் செலவழித்து விட்டதால் எப்படியாவது அதை வெளிக்கொண்டு வந்துவிட வேண்டும் என்று துடியாய்த் துடித்தார்கள். அகராதி ஒன்றைச் செப்பனிட்டுப் போதிய அனுபவம் பெற்றிருந்த டைடெராட்டிடம் அந்த வேலையை ஒப் படைத்தனர். டி. குவா சேர்த்து வைத்திருந்த கை யெழுத்துப் பிரதிகளை யெல்லாம் கிள்ளுக்கீரை போல அலங்கோலமாக டைடெராட்டிடம் கொடுத்தனர். குப்பை உருவத்தில் தென்பட்ட அவற்றிலிருந்து உருப் படியாக எதையும் சேர்த்தெடுக்க முடியவில்லை. புதிய களஞ்சியம் ஒன்றைத் திரட்டும்படி டைடெராட் பதிப் பாளர்களைத் தூண்டினார்.டி' அலெம்பர்ட் கணித தொடர்புடைய குறிப்புகளைச் சேர்க்கும் பணியில் ஈடு பட்டார். மற்றும் வெவ்வேறு துறைகள் பற்றிய குறிப் புகளைச் சேர்ப்பதற்கென்று 21 பேர் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். அவர்களெல்லாம் தவறுகள் மிகுந்ததும், பொருள் விட்டுப் போனதுமானக் கட்டுரைகள் எழுதித் தொகுப்பில் சேர்க்கத் தலைப்பட்டார்கள். மூன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களஞ்சியம்_1953.pdf/15&oldid=1732250" இலிருந்து மீள்விக்கப்பட்டது