16 களஞ்சியம் மாதத்திற்குள் எல்லாம் முடிந்துவிட வேண்டும் என்று பதிப்பாளர்கள் தொல்லை கொடுத்தனர். சுட்டுரை வழங்க ஒப்பியவர் யாரும் யாரும் குறித்த காலத்திற்குள் அனுப்பி வைக்கவில்லை. இசையைப்பற்றி மட்டும் ரூசோ ஒரு சுட்டுரை எழுதியிருந்தார்.அதுவும் அவசர மாகவும், அரைகுறையாகவும் எழுதி முடித்ததாகும் என்று ரூசோவே ஒப்புக் கொண்டார். இந்த நிலையில் களஞ்சியத்தை உருவாக்குவது செய்யத்தகாத செயல் என்று அரசு கருதிற்று. அதில் எழுகப்பட் டிருந்த கட்டுரை ஒன்றுக்காக 1749 ஜூலை 29-ம் நாள் டை டெ ராட்டை தண்டித்துச் சிறைபிட்டார்கள். சிறையில் 28 நாட்கள் காலங் கழித்த பின்பு 3 மாதம் பத்து நாட் கள் சிறைக்கு வெளியே கைதியாகவே வைக்கப்பட் டிருந்தார்.டைடெராட்டைச் சிறைக்கு அனுப்பினார் களே பொழிய களஞ்சியம் உருவாக்க வேண்டும் என்ற உணர்ச்சியை சிறைக்கனுப்பவில்லை. காலத் தாழ்வு ஏற்பட்டது. எனினும் அச்சியற்றுதல் நிற்கவில்லை. 1750-ம் ஆண்டில் களஞ்சியம் எப்படிக் கொண்டு வரப்படும் என்பதற்கான முன்னறிவிப்பை, டைடெ ரெட் வெளியிட்டார். அதன்படி 8 பாகங்களையும், 600 பக்கங்களையும் கொண்டதாக அக்களஞ்சியம் இருக்கும் என்று சொல்லப்பட்டது. 1751-ல் முதல் பாகம் தோற்ற மளித்தது. இரண்டாவது 1752 ஜன வரியில் வெளிவந்தது. களஞ்சியத்தின் அவ்விரு பாகங்களும், அரசாங்கத்தின் பார்வையை ஈர்க்குமள வுக்கு உலவி வந்தன. மன்னனுக்கும், மதத்திற்கும் தீங்கிழைக்கக் கூடியது அக்களஞ்சியம் என்று கருதி, அதைப் பரப்பக் கூடாது என்று அரசாங்கம் தடை
பக்கம்:களஞ்சியம் 1953.pdf/16
Appearance