நெடுஞ்செழியன் 17 யுத்தரவு விதித்தது. அது 1752 பிப்ரவரி 9-ல். பிப்ர வரி 21-ல் அதை அச்சியற்றுபவரான லெப்ரிடனின் வீடு சோதனையிடப்பட்டது. படங்களோ, கட்டுரை களோ ஒன்றுகூட அங்கு காணப்படவில்லை. மூன்றாம் பாகத்திற்கான கட்டுரைகளும் மறைந்து விட்டன. டைடெராட்டும் மற்றொரு பதிப்பாளரும் சேர்ந்து எல்லாவற்றையும் வேறிடங்களில் பதுக்கி வைத்து விட்டார்கள். ஜெஸ்யூட் பாதிரிமார்கள் தங்களுக் கொத்தாற்போல் களஞ்சியத்தைத் தொடர்ந்து எழுத முயன்றனர். ஆனால் அது அவர்களால் இயலவில்லை. நாளடைவில் களஞ்சியம் நாட்டிற்குப் பெருமை யளிக்கக்கூடிய தொன்றாகும் என்ற எண்ணம் அரசி னருக்கு ஏற்பட்டது. பின் தொகுப்பாசிரியர்களை வர வழைத்து, களஞ்சியத்தின் வேலைகளை மீண்டும் துவக்குமாறு அரசாங்கம் தூண்டியது. காலஞ் சிறிது தாழ நேர்ந்தாலும் மூன்றாவது பாகம் 1753-ம் ஆண்டு காட்சியளித்து விட்டது. 1757 நவம்பருக்குள் ஏழு பாகங்களும் முற்றுப் பெற்றன. பழமைக்கு மாறான் கருத்துக்கள், புதிய கண்டுபிடிப்புகள், விதவிதமான செய்திகள், அதுவரை காணப்படாத வரலாறுகள், பிறநாட்டுப் பழக்க வழக்கங்கள், மதப் பற்றைப் போக்கக்கூடிய கொள்கைகள், அரசனின் அக்கிரமச் செயல்கள், குருமார்களின் பித்தலாட்டங்கள் ஆகிய பலவும் களஞ்சியத்தில் விரிவாகச் சொல்லப்பட் டிருந்த தால், பாமர மக்கள், வெவ்வேறு நிலையில் நின்று, களஞ்சிய கர்த்தாக்கள்மீது வசைச் சொற்களை வீச ஆரம்பித்தார்கள். பொது இடங்களில் களஞ்சியத்தின் பகுதிகள் கிழித்து நெருப்பிலிடப்பட்டன. எங்கும் 2
பக்கம்:களஞ்சியம் 1953.pdf/17
Appearance