18 களஞ்சியம் கிளர்ச்சி. களஞ்சியத்தை ஆதரிப்பது குற்றமெனக் கருதப்பட்டது. அதன் ஆதரவாளர்கள் பல இடங் களிலும் தாக்கப்பட்டார்கள். பாரிஸ் பாராளு மன்றத் தில் சட்டம் தீட்டப்படவேண்டிய அளவுக்கு எதிர்ப் புணர்ச்சி எங்கும் பரவியிருந்தது. எந்தப் புதுமையை யும் எதிர்க்கும் மனப்பான்மை கொண்ட மக்கள் இதனையும் எதிர்த்தார்கள்! பாராளும் மன்றம் 1759 ஜனவரி 23-ல் இதற்கென்று கூடி, களஞ்சியத்தின் விற்பனையையும், பரவுதலையும் தடுக்க சட்டமொன்று இயற்றியது. பிப்ரவரி 6- ந் தேதி மறுபடியும் ஒரு உத்தரவு போட்டு, களஞ்சியத்தைச் சேர்ந்த மற்ற நூல்களெல்லாம் எரிக்கப்பட வேண்டுமென்றும், களஞ் சியம் மட்டும் ஒன்பது பேர் அடங்கிய குழுவின் ஆய் வுக்கு விடப்பட வேண்டும் என்றும் பாராளு மன்றம் கூறிற்று. 6-ந் சின்னுட்களுக்குப் பிறகு டைடெராட் தனிப்பட்ட முறையில் அச்சியற்றும் உரிமை பெற்று, களஞ் சியத்தை அச்சிடத் தொடங்கினார். ஆனால் எல்லா பாகங்களும் அச்சியற்றி முடியும் வரையில் அவற்றை வெளியிடக் கூடாது என்ற நிபந்தனை மட்டும் விதிக் கப்பட்டிருந்தது. என்றாலும் இரகசியமான முறை யில் பாரிஸிலும், வர்செயில்ஸிலும் களஞ்சியத்தின் பிரதிகள் பரப்பப்பட்டன. களஞ்சிய சந்தாதார்களின் பட்டியலை, அரசாங்கத்திடம் ஒப்புவிக்குமாறு அச்சுக் கூடச் சொந்தக்காரரான லெப்ரிடனை அரசியாலர் வற் புறுத்தினர். அவர் கொடுக்க மறுக்கவே 1766-ம் ஆண்டில் எட்டு நாட்கள் பாஸ்டிலி சிறையில் தள்ளப் பட்டிருந்தார். கைப்பற்றப்பட்ட பட்டியலின்படி,
பக்கம்:களஞ்சியம் 1953.pdf/18
Appearance