உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களஞ்சியம் 1953.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுஞ்செழியன் 19 சந்தாதார்களுக்கெல்லாம், அரசாங்கம் உத்தரவொன் றனுப்பி, அவர்களிடமிருக்கும் பிரதிகளையெல்லாம் போலிசாரிடம் ஒப்படைக்கும்படி கட்டளையிட்டது. துப்பாக்கி மருந்து எப்படிச் செய்யப்படுகிறது என்ற ஐயம் ஒரு பொழுது அரண்மனையில் எழுந்தது. அதற்குச் சரியான விளக்கங் காண முடியாமல் அரச குடும்பத்தில் விவாதம் இருந்து கொண்டேயிருந்தது. அரசி தன் காலிலணிந்துள்ள காலுறை எப்படிச் செய் யப்படுகிறது என்பதை அறிய ஆவலுற்றாள். இம் மாதிரியான பல ஐயப்பாடுகள் அவ்வப்போது எழுந் தன. அவற்றை யெல்லாம் விளக்கிக் காட்ட வழி யொன்றுங் காணப்படவில்லை. எல்லாவற்றிற்கும் விளக்கந்தரும் களஞ்சியம் பறிமுதல் செய்யப்படாமலி ருந்தால்; ஐயங்களெல்லாம் போக்கப்பட்டுவிடும் என்று அரசனுக்குக் கூறப்பட்டது. அரசன் 'களஞ்சியம் அபாயகரமானது' என்று தன்னிடம் அறிவிக்கப்பட்ட தால்தான் அதைப் பறிமுதல் செய்ய அனுமகி கொடுத்ததாகவும், அது அப்படியில்லை என்று கூறப் படுவதால் அதன் பிரதியொன்றைத் தன் பார்வைக்கு அனுப்பி வைக்கும்படிக் கட்டளையிட்டான். வேலை யாட்கள் உடனே களஞ்சியத்தின் 21 பாகங்களையும் மிகவும் கஷ்டப்பட்டுத் தூக்கிக்கொண்டுவந்து அரசன் முன்னால் குவித்தார்கள் அரசன் மலைத்துப் போனான். அவைகள் ஐயப்பாடுகளையெல்லாம் போக்கக் கூடியன் வாக இருக்கக் கண்ட அரசன் அவரவர் பிரதிகளை அவ ரவர்களிடம் திருப்பிச் சேர்ப்பிக்குமாறு கட்டளையிட் டான். களஞ்சியத்தின் மீதிருந்த தடை தளர்ந்தது. களஞ்சியம் மீண்டும் உருவாக ஆரம்பித்தது, அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களஞ்சியம்_1953.pdf/19&oldid=1732254" இலிருந்து மீள்விக்கப்பட்டது