20 களஞ்சியம் அச்சியற்றப்பட்ட லெப்ரிடன் அச்சுக்கூடம் 50 பேர் களைக் கொண்ட பெரிய அச்சுக்கூடமாக அக்கால நிலை யில் பாரிஸ் நகரில் கருதப்பட்டது. டைடெராட்டும் அவனைச் சேர்ந்த பிழை திருத்து வோரும் பிழைதிருத்தஞ் செய்யும்போது, எவை அவர் களுக்குச் சரியில்லை யென்றும், ஆபத்துத்தரக்கூடியன வென்றும் காணப்பட்டவோ, அந்த ஏடுகளை மட்டும் எழுதினோர் பதிப்பாளர் ஆகியோரின் சம்மதமில்லாமல், இரவோடு இரவாக அவசர அவசரமாகப் பதுக்கி வைக் கத் தலைப்பட்டனர். அவர்களுக்கு விருப்பமில்லாத பகுதிகளெல்லாம் கத்தரிக்கப்பட்டு விட்டன. எஞ் சியவை சரியாகப் பொருள் கொடுக்கின்றனவா, சொற் கள் கோர்வையாகச் செல்லுகின்றனவா என்பதைக் கூடப்பாராமல் தொகுத்தனர். சி சி ஏடுகளை, இருந் தால் பறிமுதல் செய்யப் பட்டாலும் படலாம் இன்று கருதி, அவர்களே எரித்து விட்டார்கள். கட்டுரை வழங்கிய ஆசிரியர்களின் அனுமதி பெறாமலேயே வெட்டு ஒட்டு வேலைகளை அச்சுக்கூடத் தொழிலாளர் தலைக்குத் தலை செய்து வந்தனர். டைடெராட் நாள் முழுவதும் அச்சுக்கூடத் திலேயே காலங்கழித்து வந்தான். பிறருடைய கட்டு ரைகளைச் சரி பார்ப்பதும், தானே கட்டுரைகள் எழுதி சேர்ப்பதும் அவனது வேலையாக இருந்து வந்தது, முத லில் ஆண்டு ஒன்றுக்கு 1200 விவரிகள் (பிரஞ்சு நாண யம்) சம்பளம் பெற்றான். பிறகு பாகம் ஒன்றுக்கு 2500 லிவரிகளும், அதைத் தவிர மொத்தமாக 20,000 லிவரிகளும் பெற்றான். களஞ்சியம் வெளியிடுவதற் கேற்பட்ட மொத்த செலவு 11.58,000 லிவரிகள். அவற்றால் ஏற்பட்ட லாபம் 21,62,000 விவரிகளாகும்.
பக்கம்:களஞ்சியம் 1953.pdf/20
தோற்றம்