நெடுஞ்செழியன் 21 களஞ்சியத்திற்குக் கட்டுரை வழங்கியவர்களில் முக்கியமானவர்கள் வால்டைர் (Vollaire) யூவர் ( Etler) மர்மான்டெல் (iaomonlel) மான்டெஸ்க்யூன் (Montes przen) டி ஆன்ளில் (i' Anuville) டி ஹால் பாக் (D' Elic}} டின்காட் (Tingol) ஆகியோராவார். பிரெசுக்களஞ்சியத்தை உருவாக்க டைடெராட் பட்ட தொல்லை சொல்லொணாதவை. மன்னனின் அடக்குமுறைச் சட்டம் ஓர்பால். மதக் குருமார்களின் சீற்றம் மற்றோர் பால். மக்களின் வசைச் சொல் வேறோர்பால், அம்மம்ம! எப்பக்கமிருந்தும் எதிர்ப்பு! நெருப்பிடையே உருகும் தங்கம் போல களஞ்சியம் அவ்வளவு எதிர்ப்புக்களிடையேயும் ஒளிவிட்டுக் கொண்டிருந்தது. களஞ்சியத்தின் விளைவால் பிரான்ஸ் நாட்டில் அறிவுப் புரட்சி கொழுந்துவிட்டு எரியத் தொடங் கிற்று. பழமைக் கருத்துக்கள் அத்தீயில் கருகத் தொடங்கின.மன்னன், மதம், மக்கள் ஆகிய வற்றைப் பற்றி சற்றுத் தெளிவான கருத்துக்களைக் களஞ்சியம் மக்களிடம் கொட்டிற்று. பிரெஞ்சுப் புரட்சியில் 'பிரெஞ்சுக் களஞ்சியத்திற்கும் ஒரு பங்கு உண்டு! 1 பிரெஞ்சுக் களஞ்சியம் உண்டாக்கிய அளவு கிளர்ச்சியை, வேறு எந்தக் களஞ்சியமும் உண்டாக்க வில்லை. அது, பல பொருள்களைப்பற்றிய செய்திகளை விளக்கிக் காட்டும் அகராதியாக மட்டுமல்லாமல், அவை பற்றிக் கொள்ளவேண்டிய கருத்தினையும் வளர்ப்ப தாக இருந்தது. மதச்சார்புடைய கொள்கைகளையும், மதத்திற்கு மாறுபட்ட கருத்துக்களையும் ஒருசேர அது கொடுத்தது. மன்னனுக்குப் பகையாகக் காட்சி யளித்தது; மதத்திற்கும் பகையாக விளங்கிற்று. அந்தப் பகைமை சிலரைத் தூக்குமேடைக்கு அனுப்பி
பக்கம்:களஞ்சியம் 1953.pdf/21
Appearance