22 களஞ்சியம். மது; சிலரைச் சிறையில் தள்ளியது; மற்றுஞ் சிலரை நாடு கடத்திற்று.
பொதுவாக அக் களஞ்சியத்தில் உயர்தரக் கட்டு ரைகளும், மட்ட ரகக் கட்டுரைகளும் விரவி யிடம் பெற்றிருந்தன. சரியான மேற்பார்வை கிடையாது. கட்டுரைகளெல்லாம் அவசரக் கோலத்தில் அள்ளிக் கொட்டப்பட்டவை. வால்டைர் அக் களஞ்சியத் தைப் பற்றிக் குறிப்பிடும்போது "களஞ்சியம் பாதி பளிங்கினாலும் பாதி மரத்தாலும் செய்யப்பட்ட தாகும் என்று குறிப்பிட்டார். தொகுப்பாசிரியரான டைடெராட்டே முழுத்திருப்தி அடையவில்லை. நல்ல எழுத்தாளர்க்குப் பணவுதவி செய்ய போதிய அளவு பொருளில்லாததால், தகுதியற்ற எழுத்தாளர்களைக் கொண்டு பலதிறப்பட்ட செய்திகளும் சேர்க்கப்பட் டன. பிரெஞ்சுக் களஞ்சியத்தை ஆதரித்தும், எதிர்த் தும் எழுதப்பட்ட நூல்கள் ஏராளம். 18வது நூற் றாண்டில், பிரெஞ்சுக் களஞ்சியம் ஏற்படுத்திக் கொண்ட சிறந்த இடத்தை, வேறெந்த நூலும் எட்டிப் பிடிக்கவில்லை! ஆங்கில மொழியில் சிறப்பித்துச் சொல்லப்படும் "பிரித்தானியக் களஞ்சியம்" (Eneyelopecia of Britanica) 1771-ம் ஆண்டில் முதன் முதலாக மூன்று பாகங்களுடன் வெளிவந்தது. அது 2670-பக்கங்களை யும்,160 படங்களையும் கொண்டு விளங்கிற்று.ஸ்காத் லாந்து நாட்டின் கற்றோர் குழுவொன்றின் முயற்சி யால் அக்களஞ்சியம் வெளிக்கொண்டு வரப்பட்டது. 1778-ல் 2-ம் பதிப்பு வெளியிடப்பட்டது. அப் பொழுது அது 10 பாகங்களாக விரிந்து 8695 பக்கங் களையும் 340-படங்களையும் கொண்டிருந்தது.