உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களஞ்சியம் 1953.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுஞ்செழியன் 23 1797-ல் 3-ம் பதிப்பு பதிப்பிக்கப்பட்டது. அது போது அதன் பாகங்கள் பதினெட்டாகி, பக்கங்கள் 14,579 ஆகி படங்கள் 542-ஆக விரிந்திருந்தன. 4-ம் பதிப்பு 1810-ல் வெளிவந்தது. அதில் பாகங் கள் 20, பக்கங்கள் 16,037; படங்கள் 581 இடம் பெற் றிருந்தன. 5-ம் பதிப்பு 1.817-ல் அச்சியற்றப்பட்டது. அதில் அதிக மாறுதல் ஒன்றும் ஏற்படவில்லை. 6-ம் பதிப்பும் முன்னையதைப் போலவே தான் கொண்டு வாப்பட்டது. 7-ம் பதிப்பு 1842-ல் 21-பாகங்களோடு வந்தது. அதில் 17, 101 பக்கங்களும் 506 படங்களும் இருந் தன, சில அவசியமில்லாத படங்கள் இப்பதிப்பில் எடுக்கப்பட்டுவிட்டன. 8-ம் பதிப்பு 21 பாசுங்களோடு 1860-ல் வெளி அதில் பக்கங்கள் 17,957; படங்கள் 402. இப்பதிப்பிலும் சில படங்கள் குறைக்கப்பட்டு விட்டன. வந்தது. 9-ம் பதிப்பு 24-பாகங்களோடு 1889-ல் தோற்ற மளித்தது. 10-ம் பதிப்பில் சில புதிய பாகங்களையுஞ் சேர்த்து 35 பாகங்களாகக் கொண்டு வந்தனர். 11-ம் பதிப்பின்போது அதாவது 1911-ல் 35 பாகங்கள் 29 பாகங்களாகத் தொகுக்கப்பட்டு வெளி யிடப்பட்டன. 12-ம் பதிப்பு 1922-ல் பதிப்பிக்கப்பட்டது. 29. பாகங்களோடு கூடுதலாக மூன்று பாகங்கள் சேர்க்கப் பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களஞ்சியம்_1953.pdf/23&oldid=1732258" இலிருந்து மீள்விக்கப்பட்டது