உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களஞ்சியம் 1953.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 களஞ்சியம் 1 13-ம் பதிப்பு 1926-லும், 14-ம் பதிப்பு 1929-லும் வெளி வந்தன. அதற்குப் பிறகு சில ஆண்டுகளுக்கு ஒரு முறையும், பிறகு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் கூடுதலான பாகம் ஒன்றை இனைத்து வந்தார்கள். இப் பொழுதும் இணைத்து வருகிறார்கள். பிரித்தானியாக் களஞ்சியம், தற்பொழுது எப்பொருளையும் தன்னு ளடக்கி அவற்றிற் கெல்லாம் விளக்கந் தரும் பெற்றிய தாக விளங்கி வருகிறது. அது புகழ் பெற்றதொரு களஞ்சியமாக இன்று உலகில் உலவி வருகிறது! சீனாவில் 5020 பாகங்களையும், 6109-பொதுத் தலைப்புகளையுங் கொண்ட களஞ்சியம் ஒன்று கி.பி. 1726-ம் ஆண்டில் இயற்றப்பட்டது அது பீக்கிங் (Peking) நகரில் பேரரசன் ஹாங்-கியின் கட்டளையின் பேரில் அச்சியற்றப்பட்டது. கி. 9. 1408-ல் யாங்-லோ (Young-le) என்ற சீனன் 11,100 பாகங்கள் கொண்ட களஞ்சியம் ஒன்றை உருவாக்கினான். ஒவ்வொரு பாகமும் 15 அங் குல கனமுள்ளவை. 1900-ல் பீக்கிங்கிலுள்ள நூல் நிலையம் போர் காரணமாகத் தாக்கப்பட்டு அழிக்கப் படும் போது, அதிலிருந்த களஞ்சியத்தின் பிரதிக ளெல்லாம் பாழாக்கப்பட்டன. நாங்கிங்கிலிருந்த மற்ற ஒரே பிரதியும் பெருந் தீய்க்கு இரையாயிற்று. 11,100 பாகங்கள் கொண்ட அந்தக் களஞ்சியத்தின் சில பாகங் களே தற்பொழுது காப்பாற்றப்பட்டு வருகின் றன. தமிழகத்தில் இற்றைக்கு ஈராயிரத் தைந்நூறு ஆண்டுகளுக்கு முன் எழுந்த தொல்காப்பியம் என்ற பேரிலக்கணம் ஒரு வகையில், தமிழில் தோற்றுவிக்கப் பட்ட முதல் களஞ்சியம். அந்தச் சொல்விற்கு மேலை நாட்டார்கள் என்ன கருத்தூட்டி கொண்டாடி வந்தார் களோ அதன் முழுப் பொருளும் தொல்காப்பியத்திற் கும் பொருந்துவதாயில்லை என்றாலும், பல திறப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களஞ்சியம்_1953.pdf/24&oldid=1732259" இலிருந்து மீள்விக்கப்பட்டது