நெடுஞ்செழியன் 25 கருத்துக்களும் இலக்கணங் கூறும் பொருட்டு, பல் வேறு கருத்துக்களை ஒன்று திரட்டிக் கொடுத்தலால் தொல்காப்பியத்தை முதன் முதலாக எழுந்த களஞ்சி யம் என்று சொல்வது தவறாகாது. மற்ற மொழியி லுள்ள இலக்கணங்களெல்லாம் மொழி ஒன்றுக்கே இலக்கணம் வகுக்கின்றன. ஆனால் தொல்காப்பியமோ, மொழிக்கு மட்டுமல்லாமல், மக்கள் வாழ்க்கையில் ஏற் படும் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளுக்கும் இலக்கணம் வகுத்துக் கூறுகின்றது. தொல்காப்பியத்தின் மூன்று பெரும்பாகங்களான எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்பவற்றுள் எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் மொழியிலக்கணங் கூறுகின்றன. பொருளதிகாரம் ஒன்பது இயல்களாகப் பிரிக்கப்பட் டுள்ளது. அவற்றுள் மெய்ப்பாட்டியல் என்பது 'ஸைகாலஜி' (Psychology) என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் தன்மையை அதாவது உடலிற்றோன் றும் மாறுபாடுகளை யெல்லாம் விரித்துக் கூறுகிறது. அகத்திணையியல் என்பது உள்ளத்தில் இன்பந்தோன்று வதற்குக் காரணமாக இருக்கும் அகப்பொருள் நிகழ்ச்சி களைப்பற்றியும், களவியல் காதல் வாழ்வு பற்றியும், கற்பியல் இல்லற வாழ்வு பற்றியும் கூறுகிறன. புறத் திணையியல் அரசாட்சி, போர் முறை போன்ற மனிதன் புற உலக வாழ்வு பற்றி விரித்துக் கூறுகிறது. பொரு ளியல் பல்வேறுபட்ட புறவொழுக்கங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. செய்யுளியல் பாக்கள் இயற்றும் முறைபற்றியும், உவமவியல் உவமை கூறும் இலக் கியப் பகுதியின் சிறப்பு பற்றியும்,மரபியல் பழக்க வழக்கங்களைப் பற்றியும் தெரிவிக்கின்றன. தொல் காப்பியர்,அவருக்குமுன்பிருந்த பலபேராசிரியர்களின் நூல்களை நன்கு கற்று அவற்றினின்றும் தொல்காப்பி யக் களஞ்சியத்தைத் திரட்டினார் என்பது "என்ப", "என்மனார் புலவர்', "என்றிசினோரே", "என்று
பக்கம்:களஞ்சியம் 1953.pdf/25
Appearance