26 களஞ்சியம் நவிந்திசினோரே" என்று அவர் கூறும் சொற்றொடர் களால் நன்கு தெளிவாகும். வான நூல்,மருத்துவ நூல், மர நூல், விலங்கு நூல், சிற்ப நூல்,ஓவிய நூல், கொத்து வேலைக்குரிய நூல், ஆடல் பாடல், இசை, கூத்து ஆகியவற்றை விளக்கும் நூல்கள் என்றவாரு கட் பலவகைப்பட்ட நூல்கள் தமிழில் சிறப்புற்று விளங்கி யிருந்திருக் கின்றன வென்றாலும், அவற்றை பெல்லாவற்றையும் பற்றிச் சிறிதளவாவது அறிந்து கொள்ளும் வண்ணம் திரட்டித் தொகுத்துக் கொடுப்பார் யாரும் தமிழகத்தில் இதுவரையில் தோன்றாமல் இருந்தது இரங்கத்தக்க தொன்றாகும். அந்தக் குறை, இதுவரையிலும் போக் கப்படாமல்தான் இருந்து வந்திருக்கிறது. . இன்று உலகம் போற்றும் நிலையில் சிறப்புற்று விளங்கும் பிரித்தானியாக் களஞ்சியம், பல பேரறிஞ ரின் பல்லாண்டு உழைப்பின் பயனாகும். ஆண்டு தோறும் அது விரிந்து செல்லுமாறு அங்கு அறிஞர்கள் தங்கள் கடமையைச் செய்கிறார்கள். அண்டத்தில் தொலை நோக்கு ஆடிக்கு (தூரதிருஷ்டக் கண்ணாடி) எட்டும் அளவில் உள்ள நெருப்புக் கோளத்திலிருந்து நீள் கடலின் அடியில் உலாவும் சிறு உயிர் வகைகள் வரையிலும், காட்டுமிராண்டிகளின் காதுகளில் விழுந்த முதல் கதையிலிருந்து அணுகுண்டின் வரலாறு வரையிலும் உள்ள எல்லாவற்றையும் பற்றிய விளக் கத்தை அக்களஞ்சியம் கொட்டுகிறது. அதைப்போன்ற தொரு களஞ்சியத்தைத் தமிழில் கொண்டுவர வேண் டும் என்ற அவா தமிழகத்தில் இன்று அரும்பியுள்ளது. அது ஒரு நல்ல அறிகுறியைக் காட்டுகிறது. அந்த
பக்கம்:களஞ்சியம் 1953.pdf/26
Appearance