நெடுஞ்செழியன் 27 முயற்சி பூத்து, காய்த்து, கனியவேண்டும். அப்பொழுது தான் தமிழிலக்கியப் பூஞ்சோலை மணங் கமழும். தமிழின் நல்லிசை வான்பரந்து நிற்குங் காலந்தான் தமிழர்க்கு மகிழ்வூட்டும் பெருநாளாகும். நாகரிகம் படைத்த நாடுதோறும், இலக்கியத்தின் ஒருபெரும் முகடெனக் காட்சியளித்து நிற்பது களஞ் சியமாகும். களஞ்சியத்திலிருந்து சொரியப்படும் கருத் துக்கள், உள்ளத்தில் பாய்ந்து, உலகியல் அறி ை வளம்படுத்துகின்றன. அத்தகைய தன்மை வாய்ந்த களஞ்சியம் தமிழில் தோன்றாத காரணத்தினால்தான், சென்ற காலத் தமிழ்ப் புலவர்களின் அறிவு ஒரு குறிப் பிட்ட எல்லைக்குள்ளேயே சுற்றித் திரிவதாக இருந்து வந்தது. தமிழ் இலக்கியங்களில் இதுவரையில் கூறப் பட்டவையன்றி வேறு எதையும் அறியாதாராகவே பிற்றைக் காலத் தமிழ்ப் புலவர்களெல்லாம் இருந்து வந்திருக்கிறார்கள்; இன்னும் ஒரு சிலர் அப்படியே இருந்து வருகிறார்கள். பழைமைக் கருத்துக்களையே இறுகத் தழுவிக்கொள்ளும் மனப்பான்மை வளர்ந்து வந்ததால் புதியன காணும் விழைவும் பலவற்றை அறிய வேண்டும் என்ற அவாவும் அவர்களுக் கெல்லாம் ஏற்படவில்லை. ஆகவேதான் களஞ்சியம் என்ற ஒன்று ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணமே அவர்கள்பால் எழவில்லை. தமிழ் என்றால் சைவம், சைவம் என்றால் தமிழ் என்ற முறையில் சைவர்களால் தமிழிலக்கியம் வளர்க் கப்பட்டு வந்தது. சைவனைக் கண்ட வைணவனும் அவ்வாறே தமிழிலக்கியத்தைத் தன் சமயத்திற்கும் பயன்படுத்தினான், பிற சமயங்களும் அந்த முறையையே
பக்கம்:களஞ்சியம் 1953.pdf/27
Appearance