உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களஞ்சியம் 1953.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 களஞ்சியம் கடைப்பிடிக்கத் தொடங்கின. தமிழில் காவியம் இயற் றுவதென்றால் கடவுளைப்பற்றி - சமயத்தைப் பற்றி! கதை, கட்டுரை, கவிதை எல்லாம். அவைகளைப் பற்றியே! இந்த நிலை மாறி தமிழ் வேறு, கடவுள் வேறு; தமிழ் வேறு, சமயம் வேறு; தமிழ் என்றால் அறியப்படும் அனைத்தையும் மக்களுக்கு அறிமுகப் படுத்தும் ஒரு கருவி என்ற எண்ணம் பிறக்கவேண்டும். அந்த எண்ணம் ஏற்பட்டால் அறிவுத்துறை நூல்க ளெல்லாம் தமிழில் கொழிக்கும் என்பது திண்ணம். அதன் விளைவாகக் களஞ்சியம் எளிதில் உருவடைய வழியேற்படும். ஒரு மொழியின் வளமைப் பெருகப் பெருக சிறந்த சொல்லகராதியும் உருவாக வேண்டும். தமிழில் அந்தக் குறைபாடும் இன்னமும் நீக்கப்படவில்லை. சொல்லக ராதி ஏதோ ஒன்றிரண்டு இருக்கின்றன என்றாலும் அவையும் விழுமியனவாக அமையவில்லை. மேலை நாட்டு மொழிகளில் மொழி வன்மையைச் சொல்லகராதியும், அறிவு வளமையைக் களஞ்சியமும் விளம்பி நிற்கின் றன. சென்னை மாநிலக் கல்வி அமைச்சரின் முயற்சியால் களஞ்சியம் இயற்றப்படப் போகிறது என்ற செய்தி தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியினைக் கொடுக்கிறது என்ப தில் ஐயமில்லை, ஆனால் குறுகிய நோக்கமுடையோரும் குறையறிவுடையோரும் களஞ்சியத்தை உருவாக்கும் ஆக்க வேலைகளில் ஈடுபடுத்தப் படுவார்களேயானால் சீரிய நோக்கம் வெற்றி பெறாது என்பது மட்டுமல்லா மல் தமிழருக்குப் பெருந் தீங்கிழைப்பதாகவும் முடியும். நோக்கம் 'தமிழ் வளரவேண்டும்' என்பது. பல்வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களஞ்சியம்_1953.pdf/28&oldid=1732263" இலிருந்து மீள்விக்கப்பட்டது