நெடுஞ்செழியன் J 29 துறைகளில் பேரறிஞர்களாகவுள்ள தமிழார்வமுடை யோரை அழைத்து இவ்வரிய செயலில் ஈடுபடுத்த வேண்டும். உண்மையில் திறம்படைத்தோர் யாது காரணமாகவாவது புறக்கணிக்கப்பட்டால் நோக்கம் நிறைவேறாது; களஞ்சியம் உருவாகாது; வருங்கால உலகம் பழி தூற்றியே தீரும்! கல்வி அமைச்சர் அதனை நன்கு அறிந்து செயலாற்ற வேண்டும். தமிழ்க் களஞ்சியம் வெளிக் கொண்டுவர சேர்க் கப்பட் டிருக்கும் ஒரு நூறாயிர ரூபாய்கள் போதா. கோவில்களிலும், மடங்களிலும் முடங்கிக் கிடக்கும் பெரும் பொருளைத் தமிழன் பேரால் எடுத்து களஞ்சி யத்திற்காகச் செலவிட வேண்டும். வேண்டாத இந்திக் கும், தேவையில்லாத - இறந்த மொழியாகிய வடமொழிக் கும் தமிழகத்தில் ஒதுக்கப்பட் டிருக்கும் பொருளையும் தமிழ் வளர்ச்சிக்கென்று மீட்கவேண்டும். பால் களஞ்சியத்தை எழுப்புமளவுக்குத் தமிழ் வளர்ச்சி யடையவில்லை என்பது உண்மைதான் என்றாலும் அறிவின் எல்லையைக் காட்டி நிற்கும் களஞ்சியத்தைத் தமிழில் உருவாக்கும் அரும்பெரும் பணி தமிழறிஞர் ஒப்புவிக்கப்படவேண்டும். தமிழறிஞர்களும் தாமாகவே அப்பணியை வலிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்! அதனைத்தான் நாடு எதிர்பார்த்து நிற் கிறது! களஞ்சியத்தில் ஒளி துலங்கட்டும் 1 தமிழிலக் கிய உலகில் இருள் நீங்கட்டும்!
பக்கம்:களஞ்சியம் 1953.pdf/29
Appearance