d காலண்டர் "என்ன ஆரவாரம் கேட்கிறதே!' "காலையிலிருந்தே ஒரே ஒரே கூத்தும் கூச்சலும், கடைவீதியிலும், கடற்கரையிலும் வாணிபம் குறைந்து விட்டது. விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டைபர் நதிக்கரைத் தோட்டங்களில் கூட்டங் கூட்டமாக மக்கள் நிறைந்துள்ளனர்." "கோடையின் கொடும் வெய்யில். காலடி வைத் தால் கொப்பளிக்கும் தரை. தண்ணீர்த் தொட்டியின் அருகே இருக்கும் என்னால்கூட வெப்பம் பொறுக்க முடியவில்லை. இந்த நிலையில் கூட்டம் ஏன் கூடுகிறது?" "வெற்றி வீரர் சீசரே! ரோம் நகர மக்கள் விழாக் கொண்டாடுகிறார்கள்." "விழாவா? வேடிக்கையாக இருக்கிறது! வெப்பம் மிகுந்த காலம். நதியில் நீர் வறண்டிருக்குமே! அன்றி யும் தோட்டங்களில் வறுமையாளர் போல இலை யுதிர்ந்து நிற்கும் மரங்களைத்தான் காணமுடியும். புல் தீய்ந்து கொடிகள் துவண்டு, செடிகள் உருமாறி, மூர்க்கக் குணம் படைத்த வெற்றி வீரர்களால் அழிக் கப்படும் நாட்டைப்போல கதிரவனின் வெய்யலால் கருகியுள்ள தோட்டங்களில் பறவைகள்கூட நுழைய அஞ்சுமே ! மனிதர்கள் அங்கு ஏன் கூடவேண்டும்? விழாவின் பெயர் 'வீணரின் விழா' என்று வேண்டு மானால் இருக்கலாம்." "விழாக் கொண்டாடுவோரைப் பார்த்தால் பரி தாபம்தான் வரும். நிலத்தில் பட்டு கன்னியரின் காலடி சிவந்து விட்டது. அன்ன நடை மாறி, தடுமாறும்
பக்கம்:களஞ்சியம் 1953.pdf/30
Appearance