நெடுஞ்செழியன் 31 கால்களுடன் சோர்ந்து காணப்படுகின்றனர். பக்கத்தி லுள்ள காதலர், காதலை வேண்டியல்ல குளிர்ந்த காற்றை வேண்டித் தவிக்கின்றனர். நரம்புகள் இசையை உண்டாக்கவில்லை. பாடுவோரின் குரல் மட்டு மல்ல, வெளிப்படும் பாட்டும் வறண்டதாயிருக்கிறது. கத்துகின்றனர். எந்த ரோமனும் அதை கீதமென்று சொல்லமாட்டான். மண மிக்க பொடிகள் எங்கும் தூவப்படுகின்றன. அவை காற்றில் பரவலில், மண் ணிலே கலந்து விடுகின்றன. ரோம் நகர முதல்வனே! விழாவின் பெயரைக் கேட்டால் தங்களுக்குச் சிரிப்பு வரும். விழாவின் பெயர் வசந்த விழா" "வசந்த விழா! அந்த மெல்லிய பெயரைக் கூறக் கூட இந்த வறண்ட கோடையில் நாக்குக் கூசுகிறது. பசும் புற்றரை, பசிய பூங்கா, ஆரவாரத்துடன் ஓடி வரும் டைபர் ஆறு, இவைகளின் மீது படிந்துவரும் இளங்காற்று.அதற்குப் பெயர் வசந்தம்! தளிரசைந்து மலர் காட்டி,மணம் வீசி நம்மை அழைக்கும் பூங்கா வனங்கள். கள்ளுண்டு மயங்கித் திரியும் வண்டுகள் போல இனிய கானத்தைப் பிதற்றியவண்ணம் காவிடை கன்று வரும் காதலர்கள். இள மரங்களைக் தழுவி நிற்கும் மலர்க் கொடிகள்,மலர்களிலிருக்கும் மக ரந்தத்தைப் பறித்துச் செல்லுங் மாருதம். ஓடுகின்ற மகரந்தத்தைப் பின் பாடிச் செல்லும் வண்டினம்! அது வசந்த காலத்தில் வருகிற வசந்த விழா. நீ குறிப்பிடு வது வறண்ட கோடையில் வரும் வசந்த விழா. வீண ரின் விழா, நீங்கள் எவ்வளவுதான் கூப்பாடு போட்டா லும் காதல் தெய்வமான வீனஸ் அங்கு வர மாட்டாளே!” சீசரே! விழாவின் பெயரைச் சொன்ன என்னைக் கோபிக்காதீர். விழாக் கொண்டாடுகிற மக்கள் மீதும் குற்றமில்லை. வசந்த விழா ஆரம்பமாகி விட்டதென்று குருமார் அறிவித்தார். மக்கள் குழுமியுள்ளனர். P7
பக்கம்:களஞ்சியம் 1953.pdf/31
Appearance