உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களஞ்சியம் 1953.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 களஞ்சியம் "குருமார் குருடாகி விட்டாரா, வானத்தைப் பார்த்து மண்ணின் நிலையை அறியமுடியாதபடி? நன்றா கப் பார்! வறண்ட கோடைக்கும் குளிர்ந்த வசந்தத் திற்குமுள்ள வித்தியாசம். பருவம் கோடையென்று, கோல் பிடித்துத் துழவும் குருடனும் கூறிவிடுவான் ஏன் இவ்வளவு பிழை?' சுலபமாக. "ஒருவர் மட்டுமல்ல; இவரும், இவருக்கு முன் பிருந்த குருமார்களும் செய்த சதி அது. அவர்கள் நினைத்தபடி யெல்லாம் காலண்டரை அமைத்தனர். அதன் விளைவாகப் பருவங்களைச் சரியானபடி அறிய முடியாமல் மக்கள் மயங்குகின்றனர். அதற்கு உதார ணம் குருமார் காலண்டர்படி வசந்த விழா நல்ல கோடையில் வந்துள்ளது. 0 0 0 நாள். ஜனவரி 1-ந் தேதி! ஆண்டின் முதல் ஒரு ஆண்டு தன் ஆதிக்கத்தை முற்றிலும் செலுத்தி விட்டது. புது ஆண்டு தொடங்குகிறது. 66 க வெப்ப பூமியில் மானிடராய் ஏன் பிறந்தோம்" என்று பழி தூற்றுபவர்களையும், "மண்ணகம் முழுவதும் ஆளவே நாம் பிறந்தோம்" என்று நிலத்தை அழுத் திடும் மமதையாளரையும் ஒருங்கே சுமந்து, மும் குளிரும் மாறி மாறித் தாக்க, முழுமதி மறைந்தும் வெளிப்பட்டும் விளையாடி வர, சூரியனைச் சுற்றி ஒரு வட்டம் சுழன்றுவிட்டது பூமி. கதிரவனை ஒரு முறை சுற்றி வர பூமி எடுத்துக் கொள்ளும் கால அளளிற்கே ஆண்டு என்று பெயர். வான நூல் ஆராய்ச்சிகளின்படி ஆண்டின் சரியான அளவு 365 நாட்கள் 5-மணி 48- நிமிடம் 49.7-வினாடிகளாகும். ஆண்டு தோறும் 365- நாட்களென்றும், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு நாள் கூட்டுவதன் மூலமும் இந்த அளவு ஒருவாறு பாதுகாக் கப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களஞ்சியம்_1953.pdf/32&oldid=1732267" இலிருந்து மீள்விக்கப்பட்டது