84 களஞ்சியம் டையவர்கள் இவர்களுக்கு உயர்ந்த ரகங்களில் காலண் டர்கள் இனாமாக வருகின்றன. இல்லாதவர்களுக்கு இனாமாகக் கிடைப்பதில்லை. அவர்கள் வருந்துவதில்லை. வருத்தப்பட தேவையில்லை. கடைவீதியில் இரண்டணா விலையில் கூவிக் கொடுக்க காலண்டர் இருக்கிறது. அச்சுவேலை உயர்ந்த நிலையில் அழகிய காலண்டர்கள் கூட சுலபத்தில் கிடைக்கின்றன. ஆனால் காலமொன் றிருந்தது. என்றைக்கு மாதம் பிறக்கறது? ஆண்டு முடிய இன்னும் எத்தனை மாதங்களாகும்? எவராலும் கூற முடியாத நிலை. காலண்டர் இன்று வரையறுக்கப் பட்டு எல்லோராலும் எளிதில் அறியுமளவுக்கு வளர்ந்து விட்டது. வருஷப் பிறப்பு - இப்பொழுது வழக்கத்திலுள்ள வருஷம் எவ்வாறு பிறந்தது? அந்த வரவாது பல வேடிக்கையான சம்பவங்களை யுடையது. Į சரித்திர காலத்துக்கு அப்பாற்பட்ட மனிதனுக் குக் காலத்தைக் கணக்கடுவதற்கான வசதிகள் மிகக் குறைவே. கதிரவனின் போக்கு ஒன்றுதான் கால வரையறையின் முதற்பாடம். கதிரவன் உதயமான தும் வெளிச்சம் வருவதும், அது மறைந்ததும் இருட்டு ஏற்படுவதும், இவ்வாறாக உதயமும் மறைவும் மாறி மாறி பொழுது போவதைக் காட்டின. ஒரு உதயத்தி லிருந்து மறு உதயம்வரை உள்ள கால அளவுக்கு நாள் என்று பெயர் ஏற்பட்டது. முதன்முதலில் நேற்று, இன்று, நாளை என்ற காலப்பெயர்கள்தான் ஏற்பட்டி ருக்க முடியும். மொழி வளர்ச்சியில் இம்மூன்று சொற் களைத் தவிர நாளை அடிப்படையாகக் கொண்ட வேறு தனிச் சொற்கள் அதிகம் உண்டாகாதது கவனிக்கத் தக்கது. ஒரு பகற் பொழுதிற்கும் மற்றொரு பகற்பொழு திற்கும் எத்தகைய வித்தியாசமும் ஆதிகாலத்தில் புலப் பட்டிருக்காது. ஆனால் இராக்காலங்கள் குறுகிய கால அளவிற்குள் பல மாறுதல்களைக் காண்பித்தன. பகலில்
பக்கம்:களஞ்சியம் 1953.pdf/34
Appearance