நெடுஞ்செழியன் 35 எவ்வாறு ஞாயிறு வழி காட்டியதோ, அவ்வாறே இரவு நேரத்தில் திங்கள் உதவியது. முழு வட்டமாக ஒளிவிட்ட திங்கள் நாள்தோறும் தேய்ந்து கடைசியில் முழுவதும் மறைந்துவிடுவதும், பின் சிறுகச் சிறுக வளர்ந்து முழு உருவத்தை அடைவதும் அவர்களின் கவனத்தை ஈர்த்தது. கதிரவன் உதயமாகி, மறைந்து மறுபடியும் உதயமாகும் வரை ஏற்பட்ட கால அளவு நாள் என்று பெயர். அதைப்போல திங்கள் முழு உருவத்திலிருந்து தேய்ந்து முற்றிலும் மறைந்து மறு படியும் முழு உருவத்தை அடையும் வரையுள்ள கால அளவிற்கு மாதம் என்ற பெயர் ஏற்பட்டது. காலத்தை மதிப்பிடுவதற்குஉதவியாக இருந்தகாரணத்தினால்தான் திங்களுக்கு மதி என்ற பெயரும், அதன்மேல் எழுந்த கால அளவுக்கு திங்கள் என்ற பெயரும் ஏற்பட்டன். இந்தக் கணக்கின்படி ஒரு மாதம் 29 நாள் கூடியது. மற்றொரு வகையில் காலத்தைக் கணக்கிட்டார் கள். இயற்கை வேறுபாடுகள், மழைக்காலம், கோடைக் காலம், இலையுதிர் காலம், செடி கொடிகளில் தளிர்கள் உண்டாவது, சமவெளிகளில் புல் செழிப்பாக வளர் தல், ஆறுகளில் நீர் பெருகி மறுபடியும் வடிதல் இவை போன்ற வேறுபாடுகள் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் தவறாது வருவது அவர்களின் கவனத்திற்கு வந்தது. இந்தக் கால அளவைக் கணக்கிடுவதுதான் ஆண்டு. ஆங்கில மொழியில், "நான் இருபது கோடை காலங்களுக்கு முன் பிறந்தவன், நான்குமாரிக்காலங் களுக்கு முன் அது நிகழ்ந்தது" போன்றவாக்கியங்கள் பருவ வேறுபாடுகளைக் கொண்டு காலத்தைக் குறிப் பிடுகின்றன. "கார் காலத்தின் வருவேன்" என்று காதலன் விடைகூறிப் போவதும், "கார்காலம் நெருங்கிவிட்டது, அவர் காட்டிச் சென்ற முல்லையும் என் தனிமையைப் பார்த்து நகை செய்கிறது. வாடை தொடங்குகிறது,
பக்கம்:களஞ்சியம் 1953.pdf/35
Appearance