36. களஞ்சியம் எனினும் அவர் வரக்காணேன்" எனத் தலைவி ஏங்கு வதுமான சகப் பாடல்களும் பருவ வேறுபாடுகள் காலத்தைக் குறிக்கின்றன. பயிர்த் தொழிலில் ஈடுபட்டவர்களுக்குப் பயிர் வகைகளின் தோற்றமே காலக் கணக்கீடாக அமைந் தது. கடலுக்குப் பக்கத்திலிருப்போர் கடலலையின் ஏற்றத் தாழ்வுகளையும், காற்றின் கடுமை, திக்கு இவை களையும், லிலயில் அகப்படும் மீன் இனங்களின் வேறு பாடுகளையுங் கண்டு காலத்தைக் கணக்கிட்டனர். ஒரு பருவத்திற்கும் மற்றொரு பருவத்திற்கும் இடைப்பட்டக் காலத்தைச் சரியாகக் கணக்கிட முயற்சி செய்யப்பட்டது.பருவ வேறுபாடுகளை முன்கூட்டியே. தெரிந்துகொள்வது பயிர்த்தொழிலில் ஈடுபட்டவர்கள், ஆடுமாடு மேய்ப்பவர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்படும் பள்ளத்தாக்குகளில் வசிப்பவர்கள் இவர்களுக்கு அவ சியமாகிவிட்டது. 29, நாள் கூடிய மாதம் என்ற அளவு வழக்கில் வந்துவிட்டபடியால் அதைக்கொண்டு வரு ஷத்தை அளக்க முற்பட்டனர். ஒரு மாதத்திற்கு 30-நாட்கள் என்று வைத்துக் கொண்டு 12 - மாதங்கள் கொண்டது ஒரு ஆண்டு என்று ஆரம்ப காலத்தில் எகிப்தியரால் கொண்டாடப் பட்டது.360-நாட்கள் கொண்ட வருஷக் கணக்கு சுமேரியா, சைனா போன்ற நாடுகளில் இருந்ததாகத் தெரிகிறது. பாபிலோனியர் 29 30 - என்று மாறிமாறி 12 மாதங்களமைத்தனர். இதன்படி ஆண்டு ஒன்றுக்கு 354- நாட்கள் வரும். திராவிட நாகரிகங்கள் தழைத்த சிந்துநதி தீரத்தில் நட்சத்திரங்களின் அமைப்பைக் கொண்டு ஆண்டின் தொடக்க நாள் யறுக்கப்பட் டிருந்ததாகத் தெரிகிறது. சரியாக வரை மேற்குறிப்பிட்ட சணக்குகள் சரியானவை அல்ல. நாலைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே ஒரு மாதத்திற்கு மேல் பிசகிவிடும். பருவங்கள் இவர்கள் குறித்தபடி
பக்கம்:களஞ்சியம் 1953.pdf/36
Appearance