உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களஞ்சியம் 1953.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுஞ்செழியன் 37 வருவதில்லை. ஒவ்வொரு ஆண்டிலும் நாட்கள் குறைந்து விடுகிற பிழையைத் திருத்த, யூகர்கள் 19-ஆண்டுகளில் 7 - மாதங்களையம், கிரேக்கர்கள் 8 ஆண்டுகளில் 3-மாதங் களையும் சேர்த்தனர். ஆ ஒரு ஆண்டுக்கு 365-நாட்கள் என்பது எகிப்து நாட்டில் கி.மு.5-வது நூற்றாண்டில் கண்டுபிடிக்கப் பட்டது. எகிப்து நாட்டின் உயிர் நாடியாக விளங்கியது நைல் நதி.நாட்டின் பயிர்த் தொழிலுக்கு நைல் நதியின் தண்ணீர் தேவையாயிருந்தது, ஆனால் திடீரென்று நைல் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தோடும். பக்கத்தி லிருக்கும் வயல்களும், ஊர்ப்புறங்களும் உருத்தெரியாத படி வெள்ளத்தால் அழிக்கப்படும். வெள்ள நீரைப் பயன்படுத்துவதற்கு முன் வெள்ளம் வடிந்துவிடும். எனவே நைல் நதியில் வெள்ளம் ஆரம்பமாவதை முன் கூட்டியே அறியவேண்டிய அவசியம் எகிப்தியருக்கு ஏற்பட்டது. நைல் நதியில் நீர் பெருகும் சமயத்தில், சிரியஸ் என்ற ஒளி மிக்க நட்சத்திரம் கிழக்கே விடிய லில் பிரகாசிப்பதைக் கண்டனர். பல ஆண்டுகளாக நட்சத்திர உதயத்தையும், நைல் நதி வெள்ளத்தையும் சரியாகக் கவனித்து பின்னர் ஆண்டொன்றுக்கு 865 நாட்கள் என்ற முடிவுக்கு வந்தனர். 30- நாட்கள் கொண்ட 12 - மாதங்களும், எந்த மாதத்திலும் சேராத 5 நாட்களும் கொண்ட வருஷம் அவர்களால் ஏற்படுத் தப்பட்டது. மாதங்கள் ஒன்று,இரண்டு,மூன்று என்று பெயர்கள் அளிக்கப்படவில்லை. ஆனால் ஆண்டுகள் காலண்டர் என்ற வரையறையில் சுத்தமாகக் கணிக்கப்படவில்லை. எண்ணப்பட்டன. ரோம் நகரம் வல்லரசின் தலைநகராகாத காலம். வாணிபத்தில் சிறிது வளப்பமெய்தி சிறு அரசாக விளங்கியது. அங்கு சமூக, அரசியல் விவகாரங்களில் மதக் குருமார்களுக்குத்தாம் முதலிடம் முதலிடம் இருந்தது. அவர்களால் நிர்ணயிக்கப்படுகிற பல காரியங்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களஞ்சியம்_1953.pdf/37&oldid=1732272" இலிருந்து மீள்விக்கப்பட்டது