உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களஞ்சியம் 1953.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 களஞ்சியம் நாள், கிழமை, மாதம் இவைகளைக் குறிப்பிடுவதும் ஒன்றாகும். மாதத்தின் முதல் நாளை மதத் தலைவர் அறிவிப்பார். இந்தச் செய்தி பறை அறைந்து ஊர் முழுவதும் அறிவிக்கப்படும். மாதத்தின் முதல் நாளைக்கு காலண்ட்ஸ் என்று பெயர். லத்தீன் மொழியில் காலண்ட் என்ற சொல் லுக்கு அழைப்பது என்று பொருள் ஆங்கில மொழியில் அழைப்பது என்பதைக் குறிக்கும் கால் என்ற சொல் இதனடியாகப் பிறந்ததாகும். கூவி யழைத்து அறிவிக்கப்பட்டதன் காரணமாக மாதத்தின் முதல் நாள் காலண்ட்ஸ் என்றும், அதனடியாக காலண்டர் என்ற பெயரும் உண்டாயின. கூட ザ ரோம் நாட்டில் மார்ச்சிலிருந்து டிசம்பர் வரை பத்து மாதங்கள்தாம் முதலில் கணக்கிடப்பட்டன. கவனித்துப் பார்த்தால் செப்டம்பர், அக்டோபர், நவம் பர் டிசம்பர் என்ற பெயர்கள் 7-வது, 8-வது, 9-வது 10-வது மாதம் என்ற அர்த்த முடையன'; கொஞ்ச காலத்திற்குப் பின் பாபிலோனியர்களைப் போல 354 நாட்கள் கொண்ட 12மாதங்கள் வழக்கில் வந்தன. இரட்டைப்படை எண் நல்லதல்ல என்ற எண்ணம் அவர்களுக்கிருந்ததால் ஆண்டுக்கு 355-நாட்கள் கணக் கிடப்பட்டன.12-மாதங்களும் முறையே 29, 28,31, 29,31,29,31,29,29,31, 29, 29 நாட்களுடையன. இந்த கணக்கின்பேரில் ஆண்டொன்றுக்கு 10 நாட்களுக்கு மேல் குறைந்து விடுகிறது. நாலைந்து ஆண்டுகளுக்கு ஒரு மாதத்திற்குமேல் பிசகிவிடும். இந்தப் பிழையை நீக்க, கிரேக்கர்கள் செய்ததைப் போல மூன்று நான்கு ஆண்டுகளுக்கொரு முறை ஒரு மாதம் கூட்டப்பட்டது. இவ்வாறு ஆண்டுக்குள்ள மாதங்களைக் கூட்டிக் குறைக்கும் உரிமை குருமார்கள் கையில் இருந்தது. இந்த உரிமை நாளடைவில், வீணா கக் கையாளப்பட்டது. இரண்டு மூன்று ஆண்டுகளுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களஞ்சியம்_1953.pdf/38&oldid=1732273" இலிருந்து மீள்விக்கப்பட்டது