உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களஞ்சியம் 1953.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுஞ்செழியன் கொருமுறை வழக்குகளைத் தீர்க்க நீதிபதியைத் தேர்ந் தெடுப்பார்கள். குறிப்பிட்ட ஆண்டுகள் முடிந்ததும் நீதிபதி தன் இடத்தைக் காலி செய்வார். மற்றொருவர் அந்த இடத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுவார். ஒரு நீதிபதி, தனக்கு வேண்டியவனா யிருந்தால் வருஷத்திற்கு இரண்டு மாதங்களைக் கூட்டி அவனது வேலையை அதிக நாள் நீடிக்கச் செய்வார் குருமார், வேண்டாதவனாயிருக் தால் அந்த ஆண்டை சீக்கிரம் முடித்து விடுவார். தீர்ப்பு வழங்குவதைப் போலவே வரி வசூலிப்பது, குத்தகை கொடுப்பது போன்று பல வேலைகள் குறிப் பிட்ட வருஷங்கள் முடிந்ததும் ஒருவரிடயிருந்து மற் றொருவருக்குப் போய்விடும். தனக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் இவர்களைக் கணக்கிட்டுத்தான், குருமார் ஒரு வருஷத்தின் மாதங்களைக் கணக்கிட்டார். எனவே காலவரையறை பிச$விட்டது. குருமார் குறிப் பிடும் எவையும் சரியான பருவத்தில் வருவதில்லை. ஜூலியஸ் சீசர் அதிகாரத்திற்கு வந்தபொழுது ரோம் காலண்டர் குருமார்களின் ஆதிக்கத்தில் மிகவும் பிசகியிருந்தது. அதன் உச்ச நிலைபில்தான் நாம் ஆரம் பத்தில் குறிப்பிட்டபடி வசந்தவிழா கோடையில் வந்தது. நாட்டின் அரசாங்கத்தையும், சட்டத்திட்டங்களை யும் ஒழுங்கு படுத்துவதற்கு முன்கால அமைப்பைக் கட்டுப்படுத்த சீசர் முற்பட்டான். பல ஆண்டுகளாக வெற்றிப் பாதையில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றைச் சந்தித்திருக்கிறான். அவனது கரம் ஒரு சமயம் எகிப்து நாட்டையும் எட்டிப் பிடித்தது. நைல் நதியில் அன்னப் படகில் உல்லாசமாக வாழ்ந்த ஆரணங்கு கிளியோ பாட்ராவின் அழகு கண்டு வியந்தவன் மட்டுமல்ல. அதே நைல் நதிக்கரையில் இரவு பகலாகக் கஷ்டப் பட்டு வானத்தில் மின்னடும் நட்சத்திரங்களின் போக்கை ஆராய்ந்தறிந்த வானநூல் வல்லுநரின் பாந்த அறிவையும் கண்டு வியந்தவன். ஆகவே ரோம் காலண்டர் அமைப்புத் தவறு என்று தெரிந்தபொழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களஞ்சியம்_1953.pdf/39&oldid=1732274" இலிருந்து மீள்விக்கப்பட்டது