உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களஞ்சியம் 1953.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 களஞ்சியம் 1 ஆண்டு ஒன்றுக்கு 365 நாள் என்று கணக்கிட்டு தான் ஜு-லியன் காலண்டர் வகுக்கப்பட்டது. இது உண்மையான வருஷ நேரத்தைவிட 11- நிமிடங்கள் கூடுதலானது. நூறு வருஷங்களில் முக்கால் நாள் அதிகமாக விடும். இந்தப் பிசகு 1577-ல் கிரகரி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அதுவரை 11 - நாட்கள் வித்தியாசம் வந்தது. இதை நீக்க போப் கிரிகரி 1583- அக்டோபர் 4-ந் தேதிக்கு மறுநாளை அக்டோபர் 15-ந்தேதி என்று வரையறுத்தார். பின் வழக்கம் போல் மாதங்களும் நாட்களும் தொடர்ந்தன. நூறு வருஷத்தில் முக்காள் நாளென்றால் நானூறு வருஷத்தில் மூன்று நாட்கள் வித்தியாசம் வரும், இதைத் தடுக்க கிரிகரி ஒரு வழி செய்தார். ஒலியன் காலண்டர்படி ஒரு வருஷத்தின் எண்ணை 4 - சரியாக வகுத்தால் அந்த ஆண்டு கூடிய ஆண்டு (366- நாட் களைக் கொண்டது) அதன்படி 1600, 1:00, 1800, 1900, 2000 இவையெல்லாம் கூடிய ஆண்டுகளாகும். நூற்றாண்டுகளெல்லாம் நாலால் சரியாக வகுக்கப்படு மாதலால், அவையெல்லாம் கூடிய ஆண்டுகளாகும். கிரிகரி அதை மாற்றி நூற்றாண்டுகளை 400 சரியாக வகுத்தால் மட்டுமே அவை கூடிய அண்டு என ஏற் படுத்தினார். அதன்படி 1600. 2000 மாத்திரமே கூடிய ஆண்டுகளாகும்.1700, 1800, 1900-சாதாரண ஆண்டுகளே. இதனால் 400-ஆண்டுகளில் 3 நாட்கள் விடப்படுகின்றன. 3 இந்தத் திட்டத்தை ஸ்பெயின், போர்ச்சுகல் உடனே ஒப்புக்கொண்டன.பிரான்சு, டச்சு, ஹாலந்து நாடுகளும் பழக்கத்திற்குக் கொண்டுவந்தன.இங்கி லாந்து, ருஷியா நாடுகள் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. கிரிகரி திட்டத்தை ஒப்புக்கொள்ள 1585-ல் இங்கிலாந்து பார்லிமெண்டில் சட்டம் கொண்டு வந் தார்கள். எதிர்ப்பு வந்தபடியால் பிரபுக்கள் சபையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களஞ்சியம்_1953.pdf/42&oldid=1732278" இலிருந்து மீள்விக்கப்பட்டது