உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களஞ்சியம் 1953.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 களஞ்சியம் பிரெஞ்சுப் புரட்சிக்குப்பின் காலண்டரை மாற்றி யமைக்க பிரெஞ்சு அசம்பிளி விரும்பியது. புரட்சி ஆரம்பமான 22-9-1792 லிருந்து வருஷங்களைக் கணக் கிட முடிவு செய்தனர். 30 நாட்களைக் கொண்ட 12 மாதங்களும், எந்த மாதத்திலும் சேயாத 5 நாட் களும் கொண்டது ஒரு ஆண்டு, தனித்து நிற்கும் ஐந்து நாட்களும் முறையே நற்குணம், அறிவு, உழைப்பு, கருத்து, பலன் இவைகளின் அறிகுறியாகப் பெய ரிடப்பட்டன. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிற அதிகமான ஒரு நாள் புரட்சி நாள் என்று அழைக்கப்பட்டது. மாதங்களின் பழைய யெயர்கள் மாற்றப்பட்டு, பின் வருபவைகளைக் குறிக்கும் பெயர் கள் இடப்பட்டன, திராட்சை, கடுங் காற்று, மழைக் காற்று, பனி, மழை, பருவக்காற்று, மொக்கு, மலர், புல்வெளி, அறுவடை, வெப்பம்,கனி. பிரெஞ்சுப் புரட்சி அசம்பிளியில் செய்யப்பட்ட இந்த முறை நெடுநாளைக்கு நீடிக்கவில்லை. நெப்போ லியன் ஆட்சிக்கு வந்த பொழுது பழைய முறை மீண் டும் அமுலுக்கு வந்தது. கிரிகிரி காலண்டர் திருத்தம் ருஷிய நாட்டில் 1918 வரை ஒத்துக்கொள்ளப் படவில்லை.இதனால் வெளிநாட்டுத் தேதிக்கும் ருஷியாவில் வழங்கும் தேதிக்கும் 13 நாட்கள் வித்தியாசமிருந்தது, ருஷியப் புரட்சிக்குப் பின் 1919ல் காலண்டர் திருத்தியமைக்கப் பட்டது. அதனால் தான் ருஷிய நாட்டுப் பழைய காலண்டர் தேதிப்படி அக்டோபர் 25ல் தோன்றிய புரட்சியை நவர்பர் 7-ல் கொண்டாடுகிறோம். அக்டோ பர் புரட்சி என்று பிரசித்திப் பெற்ற ருஷியப் புரட்சி நவம்பர் மாதத்தில் கொண்டாடப்படுவது பல ருக்கு ஆச்சரியத்தையே கொடுக்கும். துருக்கியில் 1926ல் கிரிகிரி திருத்தத்துடன் கூடிய ஜூலியன் காலண்டர் முறை அமுலுக்கு வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களஞ்சியம்_1953.pdf/44&oldid=1732280" இலிருந்து மீள்விக்கப்பட்டது