சினிமா "பார், பார்! பட்டணம் பார்1 பம்பாய் பார்! கல்கத்தா பார்! கராச்சி பார்! மாடமாளிகை பார்! மன்னர் மன்னனைப் பார்! உற்றுப் பார்! ஊர் வீதி யைப்பார்.....!" என்றெல்லாம் ஏற்றத்தாழ்வில்லாதகுர வில், வாய் பாடிக் கொண்டிருக்க, இடது கையால் ஒரு சலங்கையைக் குலுக்கிக் கொண்டு, வலது கையால் கைப்பிடியைச் சுற்றிக்கொண்டு படக் காட்சி காண் பீக்கும் கூண்டு வண்டிக்காரர்களை, சாலை யோரங்களில் திருவிழாக் காலங்களில் காணலாம். குழந்தைகள் காலணாக் கட்டணம் கொடுத்து கூண்டிற்குள் ஓடும் படங்களைப் பார்த்து விட்டுத் தாங்களும் சினிமா பார்த்ததாக எண்ணி மகிழ்வர். கூண்டு வண்டிக்கார னும் கிடைத்தவரைக்கும் லாபம் என்று சுற்றிக் கொண்டிருப்பான் அவனுக்கு புதிய படம் பழை படம் என்ற விளம்பரங்களோ வித்தியாசங்களோ கிடையாது. அவ்வப்போது கிடைக்கும் துண்டுப் படங்கள் அவன் கூண்டிற்குள் வந்து விடும். பார்க்கும் குழந்தைகளும் அதற்கு மேல் எதிர்பார்ப்பதில்லை. கல்கத்தா ரோட்டைப் பார்த்தோம்!" என்று எண்ணி மகிழ்வர். ழைய இந்தக் குழந்தைகள் எப்படி மகிழ்ச்சியடைவரோ அப்படித்தான் இன்றைக்கு சுமார் ஐம்பது வருடங் களுக்கு முன்னால் மானிடவர்க்கமே மகிழ்ந்து வந்தது. தொடர்ச்சியாக ஒட்டப்பட்ட படம் சுருண்டு ஓடும் பொழுது ஏற்படும் அசைவுகளைப் பார்த்து மகிழ்ச்சி யடைந்து வந்தனர். ஆனால் இன்று ஐம்பது வருடங் களுக்குப் பிறகு, படக்காட்சி எவ்வளவு மாறுதல் அடைந்திருக்கிறது.
பக்கம்:களஞ்சியம் 1953.pdf/46
Appearance