48 களஞ்சியம் சோவியத் ருஷ்யா இன்னும் உயர்ந்த இடத்திலிருக் கிறது. ஒவ்வொரு நாட்டு மக்களும் தங்கள் நாட்டிலும் ரஷ்யப் படங்கள் காண்பிக்க வேண்டுமென்று அவரவர் அரசாங்கத்திற்கு மனுப் போட்டவண்ணமாக விருக்கின்றனர். கள் க ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்தான் சினிமா கண்டுபிடிப்பதற்குரிய எண்ணங்கள் உதித்தன என்று கூறலாம். பேசும் படங்கள் தயாரிப்பதைப் பற்றி அப்பொழுது இருந்தவர்கள் கனவில்கூட எண்ணிய தில்லை. ஆனால் ஓடும் குதிரையையும் பறக்கும் கழுகை யும் படத்தில் பார்க்கலாம் என்ற அளவுக்கு எண்ணினார்கள். அதற்கான இயந்திரங்களைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் அநேகர் ஈடுபட்டனர். முதன் முதலில் ப்ளாட்டு என்ற பேராசிரியன் போண்டாஸ்கோப் (Hotascope) என்ற இயந்திரத்தை கண்டுபிடித்தான். சாதாரணமாக சுருண்டுள்ள அட்டை யில் படங்களை ஒட்டி அதை வேகமாகச் சுற்றும் பொழுது ஏற்படும் பட அசைவுகளைக் காண்பிக்கக் கூடி யதுதான் அந்த இயந்திரம். படக் காட்சிகளை மக்கள் கவனிப்பதால், "காட்சி," கவனிப்பவர்" என்ற இரண்டு வார்த்தைகளையும் சேர்த்து "பேண்டாஸ் கோப்" என்று பெயரிட்டான். 86 ற இதே மாதிரி இயந்திரத்தை வேறு ஒருவன் கண்டுபிடித்து அதற்கு "பீணாகிஸ்டோஸ் கோப்" அதாவது "ஏமாற்றும் இயந்திரம்" என்ற பெயரைக் கொடுத்தான்.பார்ப்பவர்கள் கண்ணை ஏமாற்றி உருவங் களின் அசைவை காண்பிப்பதால் அந்த இயந்திரத் திற்கு இப்பெயர் கொடுத்தான். மேலே குறிப்பிட்ட இயந்திரங்கள் தற்பொழுது சாதாரணமாகத் தோன்றிய போதிலும் சென்ற நூற்றாண்டில் அந்த இயந்திரங்கள் ஏற்பட்ட பிறகு
பக்கம்:களஞ்சியம் 1953.pdf/48
Appearance