உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களஞ்சியம் 1953.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுஞ்செழியன் 49 தான், அநேக அறிவாளர்கள் சினிமா இயந்திரம் கண்டு பிடிப்பதில் முனைந்தனர். அதன் பயனாக "ஸோட் ரோப்" (Zoetrone) அதாவது வாழ்வுச் சக்கரம் என்ற இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்குள் மற்ற இரண்டு இயந்திரங்களுக்கும் அடிப்படைத் தத்துவம் ஒன்றேயானாலும் "ஸோட்ரோப்" வசதியும் அபிவிருக் தியும் செய்யப்பட்ட இயந்திரம். அதற்குப் பிறகு சில் நாட்களுக்கெல்லாம், "ப்ராக்ஸ்னாஸ் கோப்" என்ற இயந்திரம் கண்டுபிடிக் கப்பட்டது, இந்த இயந்திரத்திற்குக் கூடாக்கப்பட்ட உருண்டையும் (Shalloe Cylinder) நடுவில் வட்டமான கண்ணாடியுந்தான் சாதனங்கள். உருண்டையின் உள் பக்கத்தில் வெவ்வேறான படங்களை ஒட்டிவிடுவார்கள். நடுவில் உள்ள கண்ணாடி நிலையாயிருக்கும். உருண் டையை மாத்திரம் வேகமாக சுற்றிவிடுவார்கள். அம் பொழுது உருண்டையின் நடுவிலுள்ள கண்ணாடியில் ஒவ்வொன்றாக உருவங்கள் தெரியும். உருண்டையை வேகமாகச் சுற்றினால் கண்ணாடியில் அசையும் உருவத் தைக் காணலாம். அநேகமாக இந்த தத்துவத்தைக் கொண்டேதான் இன்றைய சினிமா இயந்திரம்உள்ளது என்று கூறலாம். "ப்ராக்ஸ்னாஸ் கோப்பின்" கண் ணாடிக்குப் பதில் திரை வைத்து சாதாரணப் படம் வெளிச்சத்தின் மூலமாகத் திரைக்குச் செலுத்தம் படுகிறது. இவ்வளவு இயந்திரங்கள் கண்டுபிடித்த பிறகும் காகிதப் படங்களை ஓட்டியே ஒவ்வொருவனும் படத் தின் அசைவை வேடிக்கைப் பார்த்து வந்தான்.நாள் டைவில் நல்ல புகைப்படங்களையே மேற்கண்ட இயந் 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களஞ்சியம்_1953.pdf/49&oldid=1732285" இலிருந்து மீள்விக்கப்பட்டது