களஞ்சியம் வயோதிகத் தந்தை - வாலிப பருவமடைந்த இரு மைந்தர்கள் ஒருவன் கோலுங் கையுமாக இருந்து ஊர் திரிந்து வந்தான். மற்றொருவன் புத்தகமுங் கையு மாக இருந்த இடம்விட்டு நகராமலிருந்தான். ஒருவ னுக்கு வண்டியும் மாடும் கூட்டாளிகள். மற்றொரு வனுக்குப் பேரறிஞரின் நூல்கள்தாம் உற்ற நண்பர் கள். ஒருவன் உடலை வளர்த்து வந்தான். மற்றொரு வன் உள்ளத்தை வளர்த்து வந்தான். ஆனால் இரு வரும் குடும்பப் பொறுப்பை ஏற்றதில்லை. முதுமையைத் தழுவி, கல்லறை நோக்கிக் காலங் கடத்திக் கொண்டிருந்த தந்தைக்கு மைந்தர்களின் போக்குக் குடும்பப் பொறுப்பைத் தாங்கக் கூடியதாகத் தென்படவில்லை. ஆகவே அவர்களின் திறமையைச் சோதனை செய்ய அவர் விரும்பினார். அதற்கொரு வழியுங் கண்டு பிடித்தார். அவர் தன் வீட்டிலுள்ள இரு அறைகளை இரண்டு பிள்ளைகளுக்கும் வழங்கி ஒரு குறிப்பிட்ட தொகை பணத்தையும் சமமாகப் பங்கிட்டுக் கொடுத்து, 'நான் இன்று மாலை உங்கள் அறைகளுக்கு வந்து பார்வை யிடுவேன். அப்பொழுது நீங்கள் உங்கள் அறைகளைப் பொருள்களால் நிரப்பி வைத்திருக்க வேண்டும்." என்று தெரிவித்தார். தந்தையின் திட்டத்தை ஏற்றுக்கொண்ட தனயந் கள் அதை நிறைவேற்றி வைக்கும் வேலையில் முனைக் தனர். .
பக்கம்:களஞ்சியம் 1953.pdf/5
Appearance