50 களஞ்சியம் திரங்களில் போட்டுப் பார்த்தார்கள். அது காகிதப் படங்களைவிட சுத்தமான உருவத்தைக் காண்பித்தது. புகைப்படங்களை உபயோகிப்பதில் அவர்களுக்கு மற் றெரு வசதியிருந்தது. அதாவது, சேர்ந்தாற்போல் அசையும் உருவங்களை புகைப்படக் காமிரா மூலமாக அடைய முடிந்தது. உதாரணமாக ஒரு நாய் ஓடுவதைப் போல சினிமா பார்க்க எண்ணினார்கள் என்று வைத் துக்கொள்வோம். காமிரா மூலமாக ஓடும் நாயின் நாலைந்து அங்க அசைவுகளைப் படமெடுத்து அவைகளை "ப்ராக்ஸ்னாஸ்கோப் "பில் உருண்டையினுள் ஒட்டி சுற்றினால் கண்ணாடியில் நாய் ஓடுவது மாதிரியே உருவம் தெரியும். இந்த அனுபவம் அவர்களுக்குத் தெரிந்த பிறகு அசையும் உருவங்களை புகைபடமெடுப்பது வளர ஆரம்பித்தது,இம்மாதிரி முதன் முதலில் கலிபோர்னி யாவில் 1872-ல் எட்வர்ட் மைபிரிட்ஜ் என்பவன் அநேக புகைப்படங்கள் எடுத்தான். ஓடிக்கொண்டிருக்கும் குதிரையை வெவ்வேறு அமைப்புகளில் படம் பிடிப்பது எப்படி என்ற பிரச்னையை அவன் சுலபமாகத் தீர்த்துக் கொண்டான். குதிரை ஓடும் பாதையில் ஒரு ஓரத்தில் வெள்ளைத் கட்டியை வைத்தான்.மற்றொரு ஒரத்தில் இரண்டடி உயரமுள்ள சுவற்றில் வரிசையாக 24 காமி ராக்களை வைத்தான். இந்த காமிராக்களின் ஸ்விட்ச் சில் ஒவ்வொரு நூலைக்கட்டி அதை ரோடின் எதிர் புறத்திலிருந்த தட்டியில் கட்டிவிட்டான். காமிராவில் புகைப்படங்களைத் தயாராக வைத்துவிட்டு குதிரையை அந்த ரோடின் வழியாகத் துரத்திவிட்டான். குதிரை ஓடிவரும்பொழுது நூல்கள் ஒவ்வொன்றாக அறுக்கப் பட்டுக்கொண்டே வந்தன. அதன் பயனாகக் காமிராக் களின் ஸ்விட்ச் அமுக்கப்பட்டு குதிரையின் படம்
பக்கம்:களஞ்சியம் 1953.pdf/50
Appearance