நெடுஞ்செழியன் 51 பிடிக்கப்பட்டது. குதிரை ஒவ்வொரு நூலை அறுக்கும் பொழுதும் தன்னைத்தானே படம் பிடித்துக்கொண்டு ஓடியது. இந்தப் புகைப்படங்களை ஒன்றாகச் சேர்த்து 'ஸோட்ரோப்'பிலோ அன்றி, "ப்ராக்ஸ்னாஸ்கோப்" பிலோ போட்டுப் பார்த்தபொழுது குதிரை ஓடும் காட்சி அப்படியே விளக்கமாகத் தெரிந்தது. இந்தப் புதிய ஆராய்ச்சிக்குப் பிறகு அசையும் உருவங்களைப் படம் பிடிப்பதில் கவனம் அதிகமாகியது. ஓடும் குதிரை தன்னைத்தானே படம் பிடித்துக் கொள்வதற்குப் பதிலாக ஓடும் பிராணிகளைத் தானா கனே பிடிக்கும் காமிராவைக் கண்டுபிடிக்க எல்லோரும் முனைந்தனர். 1884-ல் ஜார்ஜ் ஈஸ்ட்மென் என்பவன் நீளமான பிலிம் (Flim) ஒன்றைக் கண்டுபிடித்தான். ஆனால் அதைப்போட்டு படம் பிடிக்கக்கூடிய காமிரா இல்லாமல் என்ன செய்வது? அந்த மாதிரியான காமி ராவை கடைசியாக வில்லியம் பிரீஸ் என்ற ஆங்கி லேயன் கண்டுபிடித்தான். அநேகமாக இவன் கண்டு பிடித்த காமிராதான் இன்று இந்த அளவு சினிமா பிடிக்க வளர்ச்சியடைந்தது என்று கூறலாம். இந்த ஆரம்பகால முயற்சிகளுக்குப் பிறகுதான் எடிசன் சினிமா உலகில் கவனம் செலுத்தினார். 1893-ல் ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். அதற்கு "அசைவ லும்" "பார்ப்பவரும்" என்ற பொருள் கொண்ட கினிடோஸ்கோப்" என்ற பெயர் கொடுத்தார். பல விதத்திலும் அந்தக் காலத்தில் முன்னேற்றமான இயந்திரம் கினிடோஸ் கோப்" அநேகமாக நம் போடி லிருக்கும் கூண்டு வண்டிக்காரனின் படக்காட்சியை ஒத்ததுதான். "கினிடோஸ்கோப்" கைப்பிடியைச் [
பக்கம்:களஞ்சியம் 1953.pdf/51
Appearance