உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களஞ்சியம் 1953.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 களஞ்சியம் சுழற்றும்பொழுது உருண்டையாக சுழற்றப்பட்ட பிலிம் ரோல்கள் சுழன்றன. இதை லென்ஸ் அமைத்த ஒரு துவாரம் வழியாகப் பார்த்தால் அசையும் உருவம் பெரிதாகத் தெரிந்தது. அநேகமாக எடிசனின் இயந் திரம் பேசாத படத்தை உண்டாக்கிவிட்டது என்று கூறலாம். ஒரு சமயத்தில் ஒருவர்தான் பார்க்க முடியு மென்ற போதிலும் படங்கள் அசைவில் தற்பொழு துள்ள சினிமாவை எட்டிப் பிடித்தன. 2 எடிசனின் இயந்திரம் மார்க்கெட்டுக்கு வந்தது. அநேகர் வாங்கினார்கள். ஆனால் ஒவ்வொருவரும் தங்க ளுக்கு மாத்திரம்தான் பயன்படுத்திக்கொள்ள முடிந் தது. காரணம் ஒருவருக்குமேல் "கினிடோஸ்கோப்" ஐ ஒரே சமயத்தில் பார்க்க டிடியாமலிருந்தது. அத்துடன் ஐம்பது அடி நீளமுள்ள படங்களைத்தான் அதில் காண் பிக்க முடிந்தது, தற்பொழுதுள்ள சிறிய புகைப்பட காமிரா மாதிரிதான் "கினிடோஸ்கோப்" இருந்தது. சாதாரண விளையாட்டுப் பொருளாய் இருந்த வரைக்கும் அது விரும்பத்தக்கதாய் இருந்தது. ஆனால் வியாபாரப் பொருளாக மாறியவுடன் நிலைமை மாறிவிட்டது. ஒவ் வொருவராகப் படம் பார்த்துப் போனால் 'கினிஸ்டோ கோப்' வைத்திருப்பவனுக்கு வருவாய் மிகக் குறை வாகவே வந்தது. ஆகவே ஒரே சமயத்தில் பலபேர் பார்க்கக்கூடிய இயந்திரமொன்றைக் கண்டுபிடித்தால் நலமென்று எண்ணினார்கள். கடைசியாக கினிடோஸ் கோப்புடன் படவிளக்கை இணைத்து பெரிதாக்கப்பட்ட ஒளியுருவத்தை இருட்டறையில் உள்ள திரையில் விழச் செய்தால் தாங்கள் நினைத்தது முடியுமென்று எண்ணி னர். அதன்பிறகு ஒளியுருவம் காண்பிக்கும் இயந்திரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களஞ்சியம்_1953.pdf/52&oldid=1732289" இலிருந்து மீள்விக்கப்பட்டது