நெடுஞ்செழியன் 53 தயாரிக்கச் சொல்லி எடிசனை வேண்டினார்கள். ஆனால் எடிசனின் எண்ணம் வேறு மாதிரியாயிருந்தது. I ஒரே சமயத்தில் பலபேர் பார்க்கக்கூடிய ஒளியுரு வப்படம் காண்பிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து விட்டால், தன்னுடைய 'கினிடோஸ் கோப்' பிறகு மதிப்பு குறைந்து, வியாபாரம் பாதிக்கப்படுமோ என்று பயந்தார்.இந்த பயத்தினாலேயே அமெரிக்கா தவிர்த்த மற்ற நாடுகளுக்கு 'கினிடோஸ் கோப்'ஐ வியாபாரம் செய்ய உரிமையளிக்க மறுத்துவிட்டார். மக்களோ புதிய இயந்திரத்திற்காக எடிசனிடம் முறையிட்ட வண்ண மிருந்தனர். ஒளியுருவ இயந்திரத்தில் எடிசன் காட்டிய அசிரத் தையைக் கண்டு வேறு பல அறிவியல் வல்லுநர்கள் கினிடோஸ்யகாப்புடன் படவிளக்கை (Magic Lan- tern) இணைத்து ஒளியுருவ இயந்திரம் செய்வதில் ஈடு பட்டனர். எடிசனின் கையிலிருந்து சினிமாத் தொழில் வெளியேறியது. இது வரைக்கும் அமெரிக்காவினுள்ளேயே நடந்து வந்த இந்த சினிமா இயந்திரம் கண்டுபிடிக்குப் முயற்சி கள், இந்த நிலையில் ஐரோப்பாவுக்கும் தாவியது. 1895-ஆம் ஆண்டில் அமெரிக்காவிலும் ஐரோப்பாவி லும் படவிளக்கை 'கினிடோஸ்கோப்புடன்" இணைத்துத் திரைப்பட காட்சி காண்பிக்கும் இயந்திரத்தைக் கண்டு பிடிப்பதில் முனைந்தனர். 1895-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒருநாள் பின் னிரவு, மூன்று மணியிருக்கும், நிசப்தம். லண்டன் நகர மக்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த நேரம். இந்த
பக்கம்:களஞ்சியம் 1953.pdf/53
Appearance