உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களஞ்சியம் 1953.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 களஞ்சியம் அமைதியைக் கலைத்தது திடீரென்று தோன்றியகைத் தட்டலும் சப்தங்களும், தெருவில் நின்றுகொண் டிருந்த போலீஸ்காரன் இந்த நேரத்தில் கைத்தட்டலுக்குக் காரணமென்னவென்று எண்ணி சப்தம் வந்த வீட்டிற் குள் ஓடினான். ஆனால் வீட்டிற்குள் நுழைந்ததும் அவன் ஆத்திரம் பறந்துவிட்டது. அவனும் கைத் தட்டிக்கொண்டு மகிழ்ச்சியுடன் அங்கு நடந்ததைப் பார்க்க ஆரம்பித்தான். அங்கு நடந்தது வேறு ஒன்று மில்லை. ராபர்ட்பால் என்ற அறிஞன் முதன் முறை ாக கினிடோஸ் கோப்பையும்-படவிளக்கையும் இணைத்து ஒளியுருவத்தைத் திரையில் விழச்செய்தான். அதைத்தான் எல்லோரும் வேடிக்கைப் பார்த்தனர். அநேகமாக பால் பேசாத சினிமாவைக் கண்டுபிடித்து விட்டான் என்றே கூறவேண்டும். இதே சமயத்தில் பிரான்சு நாட்டில் லூமிரி சகோதரர்களும் அமெரிக் காவில் லாதம் { Lathon ) என்பவனும் ஒளியுருவ இயந்திரம் (Projector ) கண்டு பிடித்தனர். சினி மாவின் தாயகமான அமெரிக்காவில் லாதம் இயந்திரம் அடைந்த கதிதான் வேடிக்கையானது. அமெரிக்கர் கள் எவ்விதமான இயந்திரம் வேண்டினரோ அந்த அளவுக்கு உபயோகமான இயந்திரத்தைத்தான் லாதம் கண்டுபிடித்தான். ஆனால் அமெரிக்கர்களோ லாதம் இயந்திரத்திற்கு மதிப்புக்கொடுக்கத் தயாராயில்லை. பலவிதமான விஞ்ஞான இயந்திரங்களையும் கினி டோஸ்கோப்" ஐயும் கண்டு பிடித்த எடிசன் ஒருவர் தான் தமக்கு நல்ல இயந்திரம் தரவேண்டும் என்று எண்ணினார்கள். எடிசனா பழைய எண்ணத்திலேயே சும்மாயிருந்தார். ஆதரிப்பாரற்று லாதம் இயந்திரம் அழிந்தது. அதே தத்துவத்தின் பேரில் ஒரு வரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களஞ்சியம்_1953.pdf/54&oldid=1732291" இலிருந்து மீள்விக்கப்பட்டது