நெடுஞ்செழியன் 55 டத்திற்குப் பிறகு தாமஸ் ஆர்மட் (Thomas Armat) என்பவன் "வைடாஸ்கோப்" என்ற இயந்திரத்தைக் கண்டு பிடித்தான். எடிசனின் கினிடோஸ்கோப்பும் படவிளக்கும் சேர்ந்ததுதான் வைடாஸ்கோப், இந்த புதிய இயந்திரம் அமெரிக்கர்கள் விரும்பியது மாதிரிவே தானிருந்தது. ஆனால் அறிஞன் லாதம் அடைந்த கதி தான் இதற்கும் வரும்போலிருந்தது. இதை எதிர் பார்த்த ஆர்மெட் எடிசனிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டான். அதன்படி ஆர்ட் கண்டுபிடித்த இயந்திரம் "எடிசனின் வைடாஸ்கோப்" என்ற பெய ருதின் மார்க்கெட்டுக்கு வந்தது. மாறுபெயரில் வெளி வந்த ஆர்மெட்டின் வைட்டாஸ்கோப் பிராட்வேயில் காட்டப்பட்டது. அதைப்பார்த்த பத்திரிகை நிருபர் கள் எடிசனுடைய புதிய இயந்திரத்தைப் பற்றி (?) வெகுவாகப் புகழ்ந்து எழுதினார்கள்! வைட்டாஸ் கோப் பரவ ஆரம்பித்தது ஆர்மெட் கண்டு பிடித்த பொழுது, 150 அடி நீளமுள்ள படத்தைத்தான் வைட் டாஸ்கோப்பில் காண்மிக்க முடிந்தது. பிறகு நாளடை வில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்ட பிறகு அதிகமான நீளமுள்ள படங்களைக் காண்டிக்க முடிந்தது. ஆர் மெட்டுக்குப் பிறகு பேசாத சினி இயந்திரம் முழு வளர்ச்சியுடன் வந்து விட்டது. இவ்வளவு துரிதமாக வளர்ந்த இந்த சினிமாத் தொழிலுக்கு ஏற்பட்ட இடையூறுகளும் பலவுண்டு. பிரான்சில் லூமிரி சகோதரர்கள் ஒளியுருவ இயந்திரம் கண்டுபிடித்த பிறகு ஐரோப்பாவில் பல நாடுகளிலுப் பேசாத சினிமா காட்டப்பட்டது. வேகமாக வளர்ந்து வரும்பொழுது எதிர்பாராத வகையில் சினிமாவுக்கு
பக்கம்:களஞ்சியம் 1953.pdf/55
Appearance