56 களஞ்சியம் ஆபத்து ஏற்பட்டது. 1897-ம் ஆண்டில் பிரான்சு, சினிமாவின் காரணமாக ஒரு தீ விபத்தைக் கண்டது. பாரிஸில் சாரிட்டி பசார் (Charify Bazaar ) என்ற இடத்தில் சினிமா காண்பிக்க திட்ட மிட்டனர். அந்த தெருவிலுள்ள வியாபாரிகள் அனைவரும் பெருமை யுடன் சினிமா காண்பிப்பதற்கு வேண்டிய உதவிகள் செய்தனர் குறிப்பிட்ட நாளில் பல பிரபுக்களும் ஏழை களும் சாரிட்டி பசாரில் கூடினர். சினிமா காண்பிக்க ஆரம்பித்தனர். சில நிமிடங்கள் சென்றிருக்கும்: திடீ பென்று பிலிம் தீப்பற்றிக்கொண்டது. பிலிமிலிருந்து இயந்திரம், பிறகு கொட்டகை இப்படியாக எங்கு பார்த்தாலும் தீ பிடித்துக்கொண்டது. இந்தப் பெருந் தீயின் பயனாக சுமார் நூற்றைம்பது பேர் இறந்தனர். பிராசின்சின் வரலாறுச் சின்னங்கள் பல அழிந்தன. சாரிட்டி பசாரே எரிந்து சாம்பலாயிற்று. இந்த பெரிய தீ விபத்திற்குப் பிறகு அந்த மக்கள் சினிமா என்றாலே அந்தப் பக்கம் போகக்கூடப் பயந்தனர். சாரிட்டி. பசார் எரிந்ததற்காகப் பிரெஞ்சு பெண்மணி கள் கறுப்புடை தரித்தனர் ! சில ஆண்டுகளுக்கு ! பிரான்சில் சினிமா தடைப்பட்டது. . சாரிட்டி பசார் சம்பவத்திற்குப் பிறகு ஐரோப்பா வில் ஒவ்வொரு தேசமும் மிக மெதுவாகவே சினிமாத் துறையில் முன்னேறிக்கொண்டு வந்தது. ஒழுங்கான முறையில் படமொன்றைத் தயாரிப்பதற்குள் 1914- 18 மகாயுத்தம் வந்தது. மகா யுத்தம் ஐரோப்பாவிற் குச் செய்த மகா கொடுமைகளில் வளர்ந்து வந்த சினிமாவைத் தடைப்படுத்தியது மொன்று. ஐரோப்பாவில் இத்தகைய இடையூறுகளுக்கு இடையில் சினிமா அகப்பட்டுக் கொண்டிருக்கும்
பக்கம்:களஞ்சியம் 1953.pdf/56
Appearance