உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களஞ்சியம் 1953.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுஞ்செழியன் 57 பொழுது, அமெரிக்காவில் சீரான முறையில் வளர்ந்து கொண்டிருந்தது. 'வைட்டாஸ்கோப்' ஏற்பட்ட பிறகு எல்லோரும் படம் பார்க்க முடிந்தது. ஆனால், திரும் பத் திரும்ப ஓடும் குதிரையும் ரயிலும் வெவ்வேறு நாடுகளின் அதிசயமான கட்டிடங்களும் மற்றும் துண்டு துண்டான படங்களுமே பார்க்க முடிந்தது. எத்தனை மாளைக்கு திரும்பத் திரும்ப இவைகளை பொறு மையுள்ள மக்கள் பார்ப்பார்கள். ஆகவே வைட்டாஸ் கோப்பிற்கு மாத்திரமல்ல, சினிமாவிற்கே மதிப்பு குறைந்தது. இதற்கு பிறகு தான் மக்கள் உணர்ச்சி யுடன் பார்க்குமளவுக்கு சில சம்பவங்களையோ அல்லது ஒரு கதையைக்கூட படம் பிடித்துக் காட்டலாம் என்ற எண்ணம் உண்டாயிற்று.நமக்கு இன்று சாதாரணமாக தோன்றிய போதிலும் அன்று சில சம்பவங்களைச் சேர்த்து சினிமா படமாக்கலாம் என்ற எண்ணங்கூட அதிசயமாகவே இருந்தது. 1898-ல் தொடங்கிய இந்த எண்ணம் 1903-ல் தான் பலனைச் கொடுத்தது. எட் வில்ஸ் எஸ். போர்ட்டர் என்பவன் "ரயில் கொள்ளை (Greai Train Robbery) என்ற கதையைப் படமாகப் பிடித்தான். ஏதாவது ஓடும் பொருளை மத்தியமாக வைத்துக் கொண்டு படமெடுக்க வேண்டு மென்ற பழைய எண்ணத்திற்கேற்ப ரயிலை வைத்துக்கொண்டு இந்த படமெடுத்தார்கள். இருந்தாலும் முதல் முதலில் எடுத்த கதைப்படம் இது வென்றே கூற வேண்டும். அதற்குப் பிறகு "ரயில் கொள்ளை "யைப் பின்பற்றி அதே மாதிரியில் பல படங்கள் வெளிவந்தன. "பெரிய பாங் கொள்ளை", "ஓநாயால் சூழப்பட்ட வர்கள்" முதலிய பல படங்கள் வந்தன. எல்லாப் படங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களஞ்சியம்_1953.pdf/57&oldid=1732294" இலிருந்து மீள்விக்கப்பட்டது