உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களஞ்சியம் 1953.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 களஞ்சியம் வொரு படமும் ஏழையின் துயரத்தை எடுத்துக் காண் பித்து முதலாளி தத்துவத்தைக் கிண்டல் செய்தபடியே இருந்தது.ஆரம்பக் காலங்களில் மிக சாதாரணமான தத்துவங்களை மத்தியமாகக் கொண்ட படங்களை அவர் எடுத்த போதிலும் நாளடைவில் அவர் திறமை வளர்ந்து விட்டது. சினிமாவில் நுழைந்து சரியாக 10 வருடங் களுக்குப் பிறகு அதாவது 1923-ல் "பாரிஸில் உள்ள ஒரு பெண்" என்ற பாடம் எடுத்தார். அதற்குப் பிறகு அவர் படங்கள் கலையுலகிலும் யாராலும் எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்து விட்டன. சாப்ளின், கிரிபத் இவர்களைத் தவிர அமெரிக்க சினிமாவை வளர்த்த வேறு பல டைரக்டர்களும் உள் ளனர். அவர்களில் வான் ஸ்டோரகியும் ஒருவர். அவர் எடுத்த படங்கள் எதுவும் முழு வெற்றி படைந்தவை என்று கூறமுடியாது. ஆனால் ஸ்டோரஹியும் பல படங்களில் தான் ஒரு பெரிய டைரக்டர் என்ற எண் ணத்தை உண்டாக்கு மளவுக்கு, சில கட்டங்களை உண் டாக்கி இருக்கிறார். ஆஸ்ட்ரிய சங்கத்தில் சாதாரண சிப்பாயாகயிருந்த ஸ்டோரஹிம் நியூரார்க்கில் தோட்டக்காரனாக வந் தார். பிறகு ஹாலிவுட்டிற்கு வந்து படிப்படியாக முன் னேறி கடைசியாக டைரக்டராக மாறினார். ஸ்டோ ரஹியம் டைரக்டர் என்ற அளவில் சினிமாவுக்கு அதிக ஊழியம் செய்திருக்கிறார். இவர்களைத்தவிர சினிமா வளர ஆரம்பித்த பிறகு ஹாலிவுட்டிற்கு வந்து வேலை செய்த அந்நிய நாட்டு டைரக்டர்களும் அதிகம். அவர்களில் ஜெர்மனியி லிருந்து வந்த லூப்ஸ்டிச், ப்ரெட் மானன், வர்ரிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களஞ்சியம்_1953.pdf/60&oldid=1732297" இலிருந்து மீள்விக்கப்பட்டது